ஆக்சிஜனுக்காக இந்தியா மூச்சுதிணறுகிறது.. மத்திய அரசை சாடிய ராகுல் காந்தி

 

ஆக்சிஜனுக்காக இந்தியா மூச்சுதிணறுகிறது.. மத்திய அரசை சாடிய ராகுல் காந்தி

மத்திய அரசின் திறமையின்மையால் இந்திய மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையை ஏற்பட்டு ஆக்சிஜனுக்காக இந்தியா மூச்சுதிணறுகிறது என ராகுல் காந்தி தெரிவித்தார்.

நம் நாட்டில் கொரோனா வைரஸ் 2வது அலை தீவிரமாக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்து வருகிறது. அதேவேளையில் கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதித்தவர்கள் அதிகரித்துள்ளதால் மருத்துவமனைகளில் ஆக்சிஜனுக்கான பற்றாக்குறை நிலவுகிறது.

ஆக்சிஜனுக்காக இந்தியா மூச்சுதிணறுகிறது.. மத்திய அரசை சாடிய ராகுல் காந்தி
ஆக்சிஜன் சிலிண்டர்கள் (கோப்புப்படம்)

மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பலர் உயிர் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி மருத்துவமனைகளில் சில மணி நேரங்களுக்கு மட்டும் பயன்படுத்தக்கூடிய அளவுக்கே ஆக்சிஜன் உள்ளதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது. ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்களிடம் உற்பத்தி திறனை அதிகரிக்கவும், மருத்துவமனை பயன்பாட்டுக்கு மட்டுமே ஆக்சிஜன் சப்ளை செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆக்சிஜனுக்காக இந்தியா மூச்சுதிணறுகிறது.. மத்திய அரசை சாடிய ராகுல் காந்தி
பிரதமர் மோடி

ஆனாலும் தேவை அதிகமாக உள்ளதால் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் திறமையின்மை காரணம் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ராகுல் காந்தி இது தொடர்பாக டிவிட்டரில், ஆக்சிஜனுக்காக இந்தியா மூச்சுதிணறுகிறது. மத்திய அரசின் திறமையின்மை மற்றும் மனநிறைவுக்கு நன்றிகள் என பதிவு செய்துள்ளார்.