மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு தொழிலாளர்களுக்கு ஊதியத்தை கிடைக்கவில்லை.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு தொழிலாளர்களுக்கு ஊதியத்தை கிடைக்கவில்லை.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பல மாநிலங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் தொழிலாளர்கள் தங்கள் ஊதியத்தை பெறவில்லை என்று மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்

ரபேல் போர் விமான ஒப்பந்தம், இந்திய எல்லையில் சீன ஊடுருவல், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய அரசின் வரிகள், பொதுத்துறை வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரைவார்க்கும் நடவடிக்கை மற்றும் வேலையின்மை போன்ற பல்வேறு பிரச்சினைகளை குறிப்பிட்டு பிரதமர் மோடி தலைமையிலான அரசை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு தொழிலாளர்களுக்கு ஊதியத்தை கிடைக்கவில்லை.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட தொழிலாளர்கள் (கோப்புப்படம்)

இந்நிலையில் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், பல மாநிலங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் தொழிலாளர்கள் தங்கள் ஊதியத்தை பெறவில்லை. தொற்றுநோய் காலத்தில், அரசாங்கம் கூடுதல் நதி உதவியை வழங்கியிருக்கும்போது, தொழிலாளர்களின் உரிமைகளும் கொல்லப்படுகின்றன. பல வீடுகளில் அடுப்பு கூட எரிக்க முடியாது பொய்யான சொல்லாட்சிக்கு அப்பாற்பட்ட ஒரு உலகம் இருக்கிறது- இந்த நல்லநாள் எப்படி? என்று பதிவு செய்து இருந்தார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு தொழிலாளர்களுக்கு ஊதியத்தை கிடைக்கவில்லை.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பிரதமர் மோடி

முன்னதாக ராகுல் காந்தி மற்றொரு டிவிட்டில், கோடிட்ட இடங்களை நிரப்புக:
நண்பர்கள் ரபேல்
வரி வசூல்- எண்ணெய் விலை அதிகம்
தொலைநோக்கு இல்லாத பி.எஸ்.யு.-பி.எஸ்.பி.
கேள்வி சிறை
மோடி அரசு——! என்று பதிவு செய்துள்ளார்.