பொருளாதாரத்தில் வளர்ச்சி வேண்டுமா?.. முதல்ல மக்கள் கைகளில் பணத்தை வையுங்க… ராகுல் காந்தி வலியுறுத்தல்

 

பொருளாதாரத்தில் வளர்ச்சி வேண்டுமா?.. முதல்ல மக்கள் கைகளில் பணத்தை வையுங்க… ராகுல் காந்தி வலியுறுத்தல்

பொருளாதாரத்தில் வளர்ச்சி வேண்டுமானால் நுகர்வு அதிகரிக்க வேண்டும், அதற்கு முதலில் மக்களின் கைகளில் பணத்தை வைக்க வேண்டும் என்று மத்திய அரசை ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவின் பலம் விவசாயிகள், அவர்களை அடக்குவது, அடிப்பர் மற்றும் பயமுறுத்தவது அரசின் வேலை அல்ல. அவர்களிடம் பேசுவது மற்றும் அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பது அதன் (அரசு) வேலை. வேளாண் சட்டங்களை 2 ஆண்டுகளுக்கு சட்டங்களை ஒத்திவைப்பதற்கான சலுகை இன்னும் டேபிளில் உள்ளது என்று பிரதமர் கூறுகிறார். இதன் பொருள் என்ன? ஒன்று நீங்கள் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று நீங்கள் நம்புகிறீர்கள் அல்லது நீங்கள் செய்யவில்லை.

பொருளாதாரத்தில் வளர்ச்சி வேண்டுமா?.. முதல்ல மக்கள் கைகளில் பணத்தை வையுங்க… ராகுல் காந்தி வலியுறுத்தல்
விவசாயிகள் போராட்டம் (கோப்புப்படம்)

டெல்லி விவசாயிகளால் சூழப்பட்டுள்ளது. டெல்லி ஏன் ஒரு கோட்டையாக மாற்றப்படுகிறது? நாம் ஏன் அவர்களை அச்சுறுத்திகிறோம், அடித்து கொலை செய்கிறோம்? அரசாங்கம் ஏன் அவர்களிடம் பேசவில்லை மற்றும் இந்த பிரச்சினையை தீர்க்கவில்லை? இந்த பிரச்சினை நாட்டுக்கு நல்லதல்ல. விவசாயிகளின் பிரச்சினை விரைவில் தீர்க்கப்பட வேண்டும். விவசாயிகள் விலகி செல்லாததால் அவர்களின் குறையை அரசாங்கம் கேட்க வேண்டும்.

பொருளாதாரத்தில் வளர்ச்சி வேண்டுமா?.. முதல்ல மக்கள் கைகளில் பணத்தை வையுங்க… ராகுல் காந்தி வலியுறுத்தல்
மத்திய பட்ஜெட்

மத்திய பட்ஜெட்டில் இந்தியாவின் 99 சதவீத மக்களுக்கு அரசாங்கம் ஆதரவு வழங்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இந்த பட்ஜெட் 1 சதவீத மக்கள் தொகைக்கானது. சிறு மற்றும் நடுத்தர துறையினரிடமிருந்து பணத்தை பறித்தீர்கள். அதனை 5-10 பேரின் பைகளில் வைத்தீர்கள். நீங்கள் (அரசு) தனியார்மயமாக்கல் பற்றிப் பேசுகிறீர்கள், அது அவர்களுக்கு பயனளிக்கும். இந்தியா தனது மக்களின் கைகளில் பணத்தை வைக்க வேண்டும். நமது பொருளாதாரத்தை மறுதொடக்கம் (வளர்ச்சி) செய்ய விரும்பினால், அது நுகர்வு மூலமாக மட்டுமே நடக்கும். விநியோக தரப்பிலிருந்து அது (பொருளாதார வளர்ச்சி) சாத்தியமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.