வெறுப்பு சாதாரணமாகி விட்டது…. கிரிக்கெட்டை கூட அது கெடுத்து விட்டது…. ராகுல் காந்தி குற்றச்சாட்டு..

வெறுப்பு சாதாரணமாகி விட்டது…. கிரிக்கெட்டை கூட அது கெடுத்து விட்டது…. ராகுல் காந்தி குற்றச்சாட்டு..

நம் நாட்டில் வெறுப்பு சாதாரணமாகி விட்டது. அது கிரிக்கெட்டை கூட கெடுத்து விட்டது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தரகாண்ட் கிரிக்கெட் அணியில் தகுதியற்ற வீரர்களை தேர்வு செய்ய சொல்லி அம்மாநில கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் அழுத்தம் கொடுப்பதால் அந்த அணியின் பயிற்சியாளர் பதவியை இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் ராஜினாமா செய்தார். ஆனால், உத்தரகாண்ட் கிரிக்கெட் வாரியத்தின் மாநில செயலாளர் மஹிம் வர்மாவோ வாசிம் ஜாபர் மீது பகீர் குற்றச்சாட்டை ஒன்றை கூறியுள்ளார்.

வெறுப்பு சாதாரணமாகி விட்டது…. கிரிக்கெட்டை கூட அது கெடுத்து விட்டது…. ராகுல் காந்தி குற்றச்சாட்டு..
வாசிம் ஜாபர்

பயிற்சியாளராக இருந்த வாசிம் ஜாபர், டிரஸ்ஸிங் ரூமில் வகுப்புவாத வேறுபாடு பார்த்தாகவும், முஸ்லீம் வீரர்களுக்கு சாதகமாக நடந்து கொண்டதாகவும் மஹிம் வர்மா குற்றம் சாட்டினார். கிரிக்கெட்டில் மதசாயம் புகுத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில் வெறுப்பு கிரிக்கெட்டையும் கெடுத்து விட்டதாக ராகுல் தெரிவித்துள்ளார்.

வெறுப்பு சாதாரணமாகி விட்டது…. கிரிக்கெட்டை கூட அது கெடுத்து விட்டது…. ராகுல் காந்தி குற்றச்சாட்டு..
கிரிக்கெட் பந்து

ராகுல் காந்தி இது தொடர்பாக டிவிட்டரில், கடந்த சில ஆண்டுகளில், வெறுப்பு சாதாரணமாகி விட்டது. இதனால் நம் அன்புக்குரிய விளையாட்டான கிரிக்கெட்டை கூட அது கெடுத்து விட்டது. இந்தியா நம் அனைவருக்கும் சொந்தமானது. அவர்கள் (வெறுப்பை பரப்புவர்கள்) நமது ஒற்றுமையை அகற்ற விட்டு விடாதீர்கள் என்று பதிவு செய்து இருந்தார். வாசிம் ஜாபர் விவகாரத்தை மறைமுகமாக குறிப்பிட்டுதான் இந்த டிவிட்டை ராகுல் காந்தி பதிவு செய்துள்ளதாக பேசப்படுகிறது.