மோடியின் போலி பிம்பத்தை காப்பாற்ற மத்திய அரசு எல்லாவற்றையும் செய்கிறது.. ராகுல் காந்தி தாக்கு

மோடியின் போலி பிம்பத்தை காப்பாற்ற மத்திய அரசு எல்லாவற்றையும் செய்கிறது.. ராகுல் காந்தி தாக்கு

மோடியின் போலி பிம்பத்தை காப்பாற்ற கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை மறைத்தல் உள்பட எல்லாவற்றையும் மத்திய அரசு செய்கிறது என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் நம் நாட்டில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தினமும் பல லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் சில ஆயிரம் பேர் கொரோனாவுக்கு தினமும் பலியாகி வருகின்றனர். கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையை இந்திய அரசு குறைத்து காட்டுவதாக நியுயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மோடியின் போலி பிம்பத்தை காப்பாற்ற மத்திய அரசு எல்லாவற்றையும் செய்கிறது.. ராகுல் காந்தி தாக்கு
நியுயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டி இருக்கும் என நிபுணர்கள் சொல்வதாகவும், ஆனால் பலி எண்ணிக்கை குறைவாக காட்டப்படுவதாக அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டு இருந்தது. ராகுல் காந்தி இந்த செய்தியை வெளியிட்டு மோடியின் இமேஜ்யை காப்பாற்ற எல்லாவற்றையும் மூடி மறைக்கிறது மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

மோடியின் போலி பிம்பத்தை காப்பாற்ற மத்திய அரசு எல்லாவற்றையும் செய்கிறது.. ராகுல் காந்தி தாக்கு
பிரதமர் மோடி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில், நியுயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தியை பதிவேற்றம் செய்து, அவரது (மோடி) போலி இமேஜ்யை காப்பாற்ற, உண்மையை மறைத்தல், ஆக்சிஜன் பற்றாக்குறையை மறுத்தல், இறப்புகளை குறைத்து காட்டுதல் போன்ற எல்லாவற்றையும் மத்திய அரசு செய்கிறது என பதிவு செய்து இருந்தார்.