கொரோனா வைரஸ் பரவல் இன்னும் முடிவுக்கு வரவில்லை.. மத்திய அரசு மெத்தனமாக இருக்கிறது.. ராகுல் காந்தி

கொரோனா வைரஸ் பரவல் இன்னும் முடிவுக்கு வரவில்லை.. மத்திய அரசு மெத்தனமாக இருக்கிறது.. ராகுல் காந்தி

கொரோனா வைரஸ் பரவல் இன்னும் முடிவுக்கு வரவில்லை ஆனால் மத்திய அரசு மெத்தனமாக இருக்கிறது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

உலகம் முழுவதையும் படாதபாடு படுத்தி வருகிறது கொரோனா வைரஸ் தொற்று நோய். நம் நாட்டில் மட்டும் கொரோனா வைரஸால் 1.09 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் 1.06 கோடி பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். தற்சமயம் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இந்த சூழ்நிலையில், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது.

கொரோனா வைரஸ் பரவல் இன்னும் முடிவுக்கு வரவில்லை.. மத்திய அரசு மெத்தனமாக இருக்கிறது.. ராகுல் காந்தி
கோவிட்-19 பரிசோதனை

இந்த புதிய வகை உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தற்போது நம் நாட்டுக்குள் வந்துள்ளது. பிரேசில், தென்னாப்பிரிக்காவில் பரவி வரும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் 4 பேர் (வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள்) இந்தியாவில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் தெரிவித்தது. இந்த சூழ்நிலையில், கொரோனா வைரஸ் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மிகவும் அலட்சியமாக இருப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் இன்னும் முடிவுக்கு வரவில்லை.. மத்திய அரசு மெத்தனமாக இருக்கிறது.. ராகுல் காந்தி
கோவிட்-19 தடுப்பூசி மருந்து

ராகுல் காந்தி இது தொடர்பாக டிவிட்டரில், கோவிட்-19 பற்றி (இனி அந்த தொற்றுநோய் வராது) மத்திய அரசு மிகவும் அலட்சியமாகவும், அதிக நம்பிக்கையுடனும் உள்ளது. ஆனால் அது இன்னும் முடிவடையவில்லை என்று பதிவு செய்து உள்ளார். மேலும், தென்னாப்பிரிக்கா, பிரேசிலில் பரவி வரும் உருமாற்றம் அடைந்த கோவிட்-19 இந்தியாவில் நுழைந்து விட்டது என்று ஐ.சி.எம்.ஆர். டி.ஜி. டாக்டர் பல்ராம் பார்கவா ஊடகங்களில் தெரிவித்ததாக வெளியான செய்தியையும் அதில் பதிவேற்றம் செய்து இருந்தார்.