பா.ஜ.க. அரசின் தோல்விகள் எதிர்காலத்தில் ஹார்வர்ட் ஆய்வு படிப்புகளாக இருக்கலாம்… கிண்டலடிக்கும் ராகுல் காந்தி

பா.ஜ.க. அரசின் தோல்விகள் எதிர்காலத்தில் ஹார்வர்ட் ஆய்வு படிப்புகளாக இருக்கலாம்… கிண்டலடிக்கும் ராகுல் காந்தி

தொற்று நோயான கொரோனா வைரஸ் கையாளுதல், பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. ஆகியவற்றில் மத்திய அரசின் தோல்விகள் ஹார்வர்ட் வர்த்தக பள்ளியில் எதிர்காலத்தில் ஆய்வுகள் செய்யப்படலாம் என ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார். ராகுல் காந்தி டிவிட்டரில், தோல்விகள் தொடர்பான ஹார்வர்ட் பிசினஸ் பள்ளியில் எதிர்கால ஆய்வுகள்: 1.கோவிட்-19 2. பணமதிப்பிழப்பு 3. ஜி.எஸ்.டி. அமல் என பதிவு செய்து இருந்தார். மேலும், கொரோன வைரஸ் தொடர்பாக, பேக்கிரவுண்டில் மோடி கொரோனா வைரஸ் தொடர்பாக பேசும் காட்சி மீது கொரோனா வைரஸ் பாதிப்பு கிராப் ஒடும் வீடியோ ஒன்றையும் ராகுல் காந்தி பதிவேற்றம் செய்துள்ளார்.

பா.ஜ.க. அரசின் தோல்விகள் எதிர்காலத்தில் ஹார்வர்ட் ஆய்வு படிப்புகளாக இருக்கலாம்… கிண்டலடிக்கும் ராகுல் காந்தி

2016 நவம்பர் 8ம் தேதியன்று இரவு பிரதமர் நரேந்திர மோடி பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. கருப்பு பணம், லஞ்சம், ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்வதாக காரணம் கூறினார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர். நாடு முழுவதும் ஒரே விதமான வரி விதிப்பு முழக்கத்துடன் 2017 ஜூலை 1ம் தேதி முதல் சரக்குகள் மற்றும் சேவைகள் வரியை (ஜி.எஸ்.டி.) மத்திய அரசு அறிமுகம் செய்தது.

பா.ஜ.க. அரசின் தோல்விகள் எதிர்காலத்தில் ஹார்வர்ட் ஆய்வு படிப்புகளாக இருக்கலாம்… கிண்டலடிக்கும் ராகுல் காந்தி

ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு வந்து 3 ஆண்டுகள் தாண்டிவிட்ட போதிலும் வரி விதிப்பில் இன்னும் ஒரு முழுமையான தெளிவு கிடைக்கவில்லை. இதனால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது நம் நாட்டில் தொற்றுநோயான கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டி விட்டது.