தொடர்ந்து 2வது நாளாக பெட்ரோல் விலை உயர்வு.. தேர்தல் முடிந்தது.. தாக்குதல் தொடங்கியது.. ராகுல் காந்தி

தொடர்ந்து 2வது நாளாக பெட்ரோல் விலை உயர்வு.. தேர்தல் முடிந்தது.. தாக்குதல் தொடங்கியது.. ராகுல் காந்தி

தொடர்ந்து 2வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதை குறிப்பிட்டு தேர்தல் முடிந்தது, தாக்குதல் தொடங்கியது என மத்திய அரசை ராகுல் காந்தி விமர்சனம் செய்தார்.

கடந்த 2 வாரங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்தது வந்தது. இந்த சூழ்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், கடந்த 1ம் தேதியன்று பொதுத்துறை எண்ணெய் வர்த்தக நிறுவனங்கள் விமான பெட்ரோல் விலையை கிலோ லிட்டருக்கு (ஆயிரம் லிட்டர்) 6.7 சதவீதம் அதிகரித்துள்ளன.

தொடர்ந்து 2வது நாளாக பெட்ரோல் விலை உயர்வு.. தேர்தல் முடிந்தது.. தாக்குதல் தொடங்கியது.. ராகுல் காந்தி
ராகுல் காந்தி

விமான பெட்ரோல் விலையை தொடர்ந்து விரைவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் உயரும் என எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின. தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின. நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 15 காசுகளும், டீசல் லிட்டருக்கு 19 காசுகளும் உயர்த்தப்பட்டது.

தொடர்ந்து 2வது நாளாக பெட்ரோல் விலை உயர்வு.. தேர்தல் முடிந்தது.. தாக்குதல் தொடங்கியது.. ராகுல் காந்தி
பெட்ரோல் பங்கு

தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதை ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி டிவிட்டரில், தேர்தல் முடிந்தது, தாக்குதல் மீண்டும் தொடங்கியது என இந்தியில் பதிவு செய்து இருந்தார். மேலும் #petroldieslhike எனவும் பதிவு செய்துள்ளார்.