தேர்தல் காரணமாக பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 18 காசுகள் குறைப்பு… ராகுல் காந்தி குற்றச்சாட்டு

தேர்தல் காரணமாக பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 18 காசுகள் குறைப்பு… ராகுல் காந்தி குற்றச்சாட்டு

தேர்தல் காரணமாக மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 18 காசுகள் குறைத்துள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை விறுவிறுவென ஏற்றம் கண்டது. கடந்த மாதம் நாட்டின் சில மாதங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டியது. இந்நிலையில் கடந்த மாதம் 28ம் தேதிக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சிறிது குறைந்தது.

தேர்தல் காரணமாக பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 18 காசுகள் குறைப்பு… ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பெட்ரோல் பங்கு

4 மாநிலம் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் நடைபெறும் தேர்தலுக்காகத்தான் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய அரசு குறைத்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ராகுல் காந்தி இது தொடர்பாக டிவிட்டரில், தேர்தல் காரணமாக, மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு 17 முதல் 18 காசுகள் குறைத்துள்ளது.

தேர்தல் காரணமாக பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 18 காசுகள் குறைப்பு… ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பா.ஜ.க.

இந்த விலை குறைப்பால் மிச்சமாகும் சேமிப்பை நீங்கள் என்ன செய்வீர்கள்? பா.ஜ.க.வால் எரிபொருள் கொள்ளை என்ற ஹேஷ்டேக்கும் பதிவு செய்து இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் பா.ஜ.க. வேலையின்மை மற்றும் ஏழ்மையை பா.ஜ.க. அரசு அதிகரித்துள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.