மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் நிதியுதவி… கேரளாவில் குறைந்தபட்ச வருவாய் திட்டத்தை செயல்படுத்துவோம்.. ராகுல் காந்தி

மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் நிதியுதவி… கேரளாவில் குறைந்தபட்ச வருவாய் திட்டத்தை செயல்படுத்துவோம்.. ராகுல் காந்தி

கேரளாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில் வறுமையை ஒழிக்க குறைந்தபட்ச வருவாய் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தார்.

கேரளாவில் 140 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைய உள்ளது. கோழிக்கோடில் நேற்று காங்கிரஸ் சார்பில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: ஜி.எஸ்.டி, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை உங்கள் பாக்கெட்டிலிருந்து பணத்தை வெளியேற்றுகிறது.

மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் நிதியுதவி… கேரளாவில் குறைந்தபட்ச வருவாய் திட்டத்தை செயல்படுத்துவோம்.. ராகுல் காந்தி
ஜி.எஸ்.டி.

பணவீக்கம் உங்கள் பாக்கெட்டிலிருந்து பணத்தை வெளியேற்றுகிறது. நரேந்திர மோடியின் வேளாண் சட்டங்கள் உங்கள் பாக்கெட்டிலிருந்து பணத்தை வெளியேற்றும். எப்போது பணம் உங்கள் பாக்கெட்டில் வைக்கப்படும்? நாங்கள் கொண்டு வரும் திட்டம் அதுதான். குறைந்தபட்ச வருவாய் திட்டம் கேரளாவில் உடனடியாக வறுமையை ஒழிக்கும். குறைந்தபட்ச வருவாய் திட்டம் அமல்படுத்திய பிறகு மாநிலத்தில் ஒருவர் கூட வறுமையில் இருக்க மாட்டார்.

மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் நிதியுதவி… கேரளாவில் குறைந்தபட்ச வருவாய் திட்டத்தை செயல்படுத்துவோம்.. ராகுல் காந்தி
ஆர்.எஸ்.எஸ்.

இந்த மாநிலத்தில் யாரும் தங்களது வங்கி கணக்கில் குறைந்தபட்சம் ரூ.72 ஆயிரம் இல்லாமல் இருக்க மாட்டார்கள். ஆர்.எஸ்.எஸ். தாக்குதலை போதிக்கிறது. வன்முறை இல்லாத சத்யாகிரஹம் விவசாயிகளை பயம் இல்லாதவர்களாக உருவாக்கும். நாம் அனைவரும் சங் அமைப்பை ஒன்றாக எதிர்க்கொள்வோம். 3 வேளாண் மற்றும் தேச விரோத சட்டங்கள் திரும்ப பெறப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.