மோடியிடமிருந்து நாம் விரும்பியதை பெற முடியும் என்று சீனாவுக்கு தெரியும்.. ராகுல் காந்தி

 

மோடியிடமிருந்து நாம் விரும்பியதை பெற முடியும் என்று சீனாவுக்கு தெரியும்.. ராகுல் காந்தி

9 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இந்தியாவில் சீனாவின் அன்னிய நேரடி முதலீடுகளுக்கு மத்திய அரசு அனுமதி கொடுக்க தொடங்கி இருப்பதை குறிப்பிட்டு, மோடியிடமிருந்து நாம் விரும்பியதை பெற முடியும் என்று சீனாவுக்கு தெரியும் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

கிழக்கு லாடக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் 15ம் தேதியன்று இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற சீன வீரர்களை இந்திய வீரர்கள் தடுத்து விரட்டியபோது இரு தரப்பு வீரர்களும் மோதி கொண்டனர். இதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் தங்களது உயிரை தியாகம் செய்தனர். இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நம் நாட்டில் சீன நிறுவனங்களின் அன்னிய நேரடி முதலீடு திட்டங்களுக்கு ஒப்புதல் கொடுப்பதை மத்திய அரசு நிறுத்தி வைத்தது.

மோடியிடமிருந்து நாம் விரும்பியதை பெற முடியும் என்று சீனாவுக்கு தெரியும்.. ராகுல் காந்தி
அன்னிய நேரடி முதலீடு

இந்நிலையில் அண்மையில் இந்தியா-சீனா இடையே ஒப்பந்தம் ஏற்பட்டு, எல்லையில் குவிக்கப்பட்ட படையை இரு நாடுகளும் விலக்கி கொள்ளும் நடவடிக்கையை மேற்கொண்டன. இந்த சூழ்நிலையில், சுமார் மாதங்களுக்கு பிறகு சீனாவின் அன்னிய நேரடி முதலீடு திட்டங்களுக்கு மத்திய அரசு வழங்க தொடங்கியுள்ளது. மேலும், சீனாவை சேர்ந்த நிறுவனங்களின் 45 அன்னிய நேரடி முதலீடு திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மோடியிடமிருந்து நாம் விரும்பியதை பெற முடியும் என்று சீனாவுக்கு தெரியும்.. ராகுல் காந்தி
பிரதமர் மோடி

சீன நிறுவனங்களின் அன்னிய நேரடி முதலீடு திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க தொடங்கியிருப்பதை காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி டிவிட்டரில், சீன நிறுவனங்களின் நேரடி அன்னிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளிப்பது தொடர்பாக வெளியாகி இருந்த செய்தியை பதிவேற்றம் செய்து இருந்தார். மேலும், மிஸ்டர் மோடி அழுத்தத்தின்கீழ் வருவதை சீனா புரிந்து கொண்டுள்ளது. அவரிடமிருந்து எதை வேண்டுமானாலும் பெற முடியும் என்பதை அவர்கள் (சீனா) இப்போது அறிவார்கள் என்று பதிவு செய்து இருந்தார்.