பா.ஜ.க.வின் வருமானம் 50 சதவீதம் அதிகரிப்பு.. உங்க வருமானம்?.. ராகுல் காந்தி கேள்வி

 

பா.ஜ.க.வின் வருமானம் 50 சதவீதம் அதிகரிப்பு.. உங்க வருமானம்?.. ராகுல் காந்தி கேள்வி

கடந்த நிதியாண்டில் பா.ஜ.க.வின் வருமானம் 50 சதவீதம் அதிகரித்துள்ளது, உங்க வருமானம் எவ்வளவு உயர்ந்துள்ளது? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏ.டி.ஆர்.) கடந்த வெள்ளிக்கிழமையன்று அரசியல் கட்சிகள் கடந்த 2029-20ம் நிதியாண்டில் பெற்ற நன்கொடைகள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி 2019-20ம் நிதியாண்டில் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க.வின் வருவாய் 50.34 சதவீதம் உயர்ந்து ரூ.3,623.28 கோடியாக அதிகரித்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் நன்கொடை வாயிலாக அதிகளவில் பா.ஜ.க. வருவாய் பெற்றுள்ளது. 2018-19ம் நிதியாண்டில் பா.ஜ.க.வின் வருவாய் ரூ.2,410 கோடியாக இருந்தது.

பா.ஜ.க.வின் வருமானம் 50 சதவீதம் அதிகரிப்பு.. உங்க வருமானம்?.. ராகுல் காந்தி கேள்வி
பா.ஜ.க.

அதேசமயம் நம் நாட்டின் பாரம்பரியமிக்க கட்சியான காங்கிரஸின் வருமானம் குறைந்துள்ளது. 2019-20ம் நிதியாண்டில் காங்கிரசின் வருவாய் 25.69 சதவீதம் சரிந்து ரூ.682.21 கோடியாக குறைந்துள்ளது. 2018-19ம் நிதியாண்டில் காங்கிரசின் வருவாய் ரூ.918.03 கோடியாக குறைந்துள்ளது. கடந்த நிதியாண்டில் தேசியவாத காங்கிரஸ் கட்சி வருவாய் 68.77 சதவீதம் அதிகரித்து ரூ.85.58 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய நிதியாண்டில் (2018-19) அந்த கட்சியின் வருவாய் ரூ.50.71 கோடியாக இருந்தது.

பா.ஜ.க.வின் வருமானம் 50 சதவீதம் அதிகரிப்பு.. உங்க வருமானம்?.. ராகுல் காந்தி கேள்வி
தேசியவாத காங்கிரஸ்

பா.ஜ.க.வின் வருமானம் அதிகரித்துள்ளதை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மறைமுகமாக அந்த கட்சியை தாக்கியுள்ளார். ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் அறிக்கையை பதிவேற்றம் செய்ததுடன், 2019-20ம் நிதியாண்டில் பா.ஜ.க.வின் வருமானம் 50 சதவீதம் உயர்ந்துள்ளது, உங்களது (வருமானம்)? என்று பதிவு செய்து இருந்தார். அதாவது கொரோனா பரவல் காரணமாக பல வேலைவாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி வரும் வேளையில், பா.ஜ.க.வின் வருமானம் 50 சதவீதம் உயர்ந்துள்ளது, உங்க வருமானம் எவ்வளவு உயர்ந்துள்ளது என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.