பொய், கொள்ளை மற்றும் முதலாளி சேவக அரசு… பா.ஜ.க அரசை சாடிய ராகுல் காந்தி

 

பொய், கொள்ளை மற்றும் முதலாளி சேவக அரசு… பா.ஜ.க அரசை சாடிய ராகுல் காந்தி

பொய், கொள்ளை மற்றும் முதலாளி சேவக அரசு என்று பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லி எல்லையில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 1ம் தேதியன்று விவசாய அமைப்புகளின் தலைவர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் எந்தவொரு தீர்வும் எட்டப்படவில்லை. ஆகையால் இன்று மீண்டு் விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

பொய், கொள்ளை மற்றும் முதலாளி சேவக அரசு… பா.ஜ.க அரசை சாடிய ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இந்த சூழ்நிலையில், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதாக கூறிவிட்டு தங்களது நண்பர்களின் வருமானத்தை அதிகரிப்பதாக மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. அரசை ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ராகுல் காந்தி டிவிட்டரில், விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்று அவர்கள் சொன்னார்கள். அவர்கள் என்ன செய்தார்கள், தங்களது நண்பர்களின் வருமானத்தை நான்கு மடங்கு அதிகரித்தார்கள் அதேவேளையில் விவசாயிகளின் வருமான பாதியாக குறையும்.

பொய், கொள்ளை மற்றும் முதலாளி சேவக அரசு… பா.ஜ.க அரசை சாடிய ராகுல் காந்தி
பா.ஜ.க.

பொய், கொள்ளை மற்றும் முதலாளி சேவக அரசு என்று பதிவு செய்து இருந்தார். மேலும், விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டு இருந்த வீடியோ ஒன்றையும் அதில் பதிவேற்றம் செய்து இருந்தார்.