பஞ்சாபில் பிரதமர் மோடி உருவபொம்மை எரிப்பு… வருத்தம் அளிக்கிறது.. ராகுல் காந்தி

பஞ்சாபில் பிரதமர் மோடி உருவபொம்மை எரிப்பு… வருத்தம் அளிக்கிறது.. ராகுல் காந்தி

பஞ்சாபில் பிரதமர் மோடி உருவபொம்மை எரிப்பு சம்பவம் வருத்தம் அளிப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு பஞ்சாப் காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் ராவணனின் உருவ பொம்மையை பிரதமர் மோடி போன்ற உருவ பொம்மையாக மாற்றியதோடு மோடியின் இருபுறமும் முகேஷ் அம்பானி, கவுதம் அம்பானி உருவ பொம்மையை வைத்து விவசாயிகள் எரித்தனர். பஞ்சாப் முழுவதும் நேற்று முன்தினம் பிரதமர் மோடியின் உருவ பொம்மை சம்பவம் நடந்தது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பஞ்சாபில் பிரதமர் மோடி உருவபொம்மை எரிப்பு… வருத்தம் அளிக்கிறது.. ராகுல் காந்தி
மோடி உருவபொம்மை எரிப்பு

இந்த சம்பவத்தை குறிப்பிட்டு வருத்தம் அளிப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி டிவிட்டரில், பஞ்சாப் முழுவதும் இது நேற்று நடந்தது. பிரதமர் மீது பஞ்சாப் அத்தகைய கோபத்தை உணருவது வருத்தமளிக்கிறது. இது மிகவும் ஆபத்தான முன்மாதிரி மற்றும் நம் நாட்டுக்கு மோசமானது. பிரதமர் மோடி விரைவாக செல்ல வேண்டும், அவர்களிடம் கேட்க வேண்டும், பிரச்சினைக்கு தீர்வு கொடுங்கள் என பதிவு செய்து இருந்தார்.

பஞ்சாபில் பிரதமர் மோடி உருவபொம்மை எரிப்பு… வருத்தம் அளிக்கிறது.. ராகுல் காந்தி
மோடி உருவபொம்மை எரிப்பு

மேலும், அதனுடன் பஞ்சாபில் பிரதமர் மோடி உருவபொம்மை எரிப்பு தொடர்பாக பத்திரிகையில் வெளியான செய்தியை பதிவேற்றம் செய்து இருந்தார். பஞ்சாபில் பிரதமர் மோடி உருவபொம்மை எரிப்பு காரணமே காங்கிரஸ்தான் என்று பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.