அம்பானி, அதானி விவசாயிகளின் நிலம், பயிர்களை குறைந்த விலைக்கு வாங்குவதை மோடி விரும்புகிறார்… ராகுல் காந்தி

அம்பானி, அதானி விவசாயிகளின் நிலம், பயிர்களை குறைந்த விலைக்கு வாங்குவதை மோடி விரும்புகிறார்… ராகுல் காந்தி

அம்பானி மற்றும் அதானி போன்றவர்கள் விவசாயிகளின் நிலம் மற்றும் பயிர்களை குறைந்த விலைக்கு வாங்குவதை நரேந்திர மோடி ஜி விரும்புகிறார் என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடந்த வேளாண் சட்ட எதிர்ப்பு பேரணியில் ராகுல் காந்தி பேசுகையில் கூறியதாவது: அம்பானி மற்றும் அதானி போன்றவர்கள் விவசாயிகளின் நிலம் மற்றும் பயிர்களை குறைந்த விலைக்கு வாங்குவதை நரேந்திர மோடி ஜி விரும்புகிறார். முழு நாட்டுக்கும் நீங்கள் உணவு கொடுத்தீர்கள். தற்போது நாங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலை பறித்து கொள்ள போகிறோம், உங்களை அம்பானி மற்றும் அதானியின் தொழிலாளர்களாக உருவாக்க போகிறோம் என்று நரேந்திர மோடி ஜி சொல்கிறார்.

அம்பானி, அதானி விவசாயிகளின் நிலம், பயிர்களை குறைந்த விலைக்கு வாங்குவதை மோடி விரும்புகிறார்… ராகுல் காந்தி
முகேஷ் அம்பானி, கவுதம் அம்பானி

இந்திய விவசாயிகளை ஒரு போதும் தொழிலாளர்களாக விட மாட்டோம் என்பதை நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். நாங்கள் இறந்தாலும் இந்த நாட்டின் விவசாயிகளை நாங்கள் ஒருபோதும் யாருடைய தொழிலாளர்களாக இருக்க மாட்டார்கள். நாம் இணைந்து இந்த சட்டத்துக்கு முடிவுக்கு கொண்டு வருவோம். காங்கிரசின் கட்சியின் ஒவ்வொரு தொண்டனும் விவசாயிகளுடன் நிற்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் நாளில் அந்த 3 சட்டங்களை கிழித்து வீசுவோம் என்று நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அம்பானி, அதானி விவசாயிகளின் நிலம், பயிர்களை குறைந்த விலைக்கு வாங்குவதை மோடி விரும்புகிறார்… ராகுல் காந்தி
பிரதமர் மோடி

முன்னதாக மோகாவில் உள்ள பட்னி கலனில் நடந்த பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடி தனது கோடீஸ்வர நண்பர்களின் 2-3 பெருநிறுவனங்களின் நலனுக்காக கடந்த 6 ஆண்டுகளாக மக்களிடம் பொய் பேசினார் மற்றும் தேசத்தை தவறாக வழிநடத்தினார் என குற்றம் சாட்டினார். மேலும், கோவிட்-19க்கு மத்தியில் பெரிய நிறுவனங்களின் கடன் மற்றும் வரியை தள்ளுபடி செய்தார். அதேவேளையில் ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும் ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை என மோடியை பகிரங்கமாக விமர்சனம் செய்தார்.