எதிர்க்கட்சிகள் பணியாற்ற மோடி அரசு அனுமதிக்கவில்லை.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு

எதிர்க்கட்சிகள் பணியாற்ற மோடி அரசு அனுமதிக்கவில்லை.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு

எதிர்க்கட்சிகள் செய்ய மோடி அரசு அனுமதிக்கவில்லை என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் இதுவரை ஒருநாள் கூட சபை முழுமையாக நடைபெறவில்லை. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பெகாசஸ் (உளவு சாப்ட்வேர்) விவகாரத்தை எழுப்பி நாடாளுமன்றத்தை தொடர்ந்து முடக்கி வருகின்றன. பெகாசஸ், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்டவை குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

எதிர்க்கட்சிகள் பணியாற்ற மோடி அரசு அனுமதிக்கவில்லை.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பிரதமர் மோடி

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், நமது ஜனநாயகத்தின் அடித்தளம் என்னவென்றால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் குரலாக இருக்க வேண்டும். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைக்ள குறித்து விவாதிக்க வேண்டும். இந்த பணியை எதிர்க்கட்சிகள் செய்ய மோடி அரசு அனுமதிக்கவில்லை. நாடாளுமன்றத்தின் நேரத்தை வீணாக்காதீர்கள். பணவீக்கம், விவசாயிகள் மற்றும் பெகாசஸ் பற்றி பேசலாம் என்று பதிவு செய்து இருந்தார்.

எதிர்க்கட்சிகள் பணியாற்ற மோடி அரசு அனுமதிக்கவில்லை.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு
நாடாளுமன்றம்

அதேசமயம், மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி நேற்று முன்தினம் பேட்டி ஒன்றில், ஒவ்வொரு பிரச்சினை குறித்தும் பேசவும், விவாதிக்கவும், ஆலோசிக்கவும் மற்றும் முடிவு செய்யவும் நாங்கள் தயாராக உள்ளோம். மத்திய அரசாங்கம் எதை பற்றியும் பேச ஒருபோதும் மறுக்கவில்லை என்று தெரிவித்தார்.