மீண்டும் எழும் ரபேல் ஒப்பந்தம் சர்ச்சை.. கர்மாவிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது.. ராகுல் காந்தி

 

மீண்டும் எழும் ரபேல் ஒப்பந்தம் சர்ச்சை.. கர்மாவிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது.. ராகுல் காந்தி

ரபேல் போர் விமானம் ஒப்பந்தம் தொடர்பாக தற்போது மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளதை, கர்மாவிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என மோடி அரசை ராகுல் காந்தி மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.

2012ம் ஆண்டில் பிரான்ஸிமிருந்து 126 ரபேல் போர் விமானங்களை வாங்க அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசாங்கம் ஒப்பந்தம் மேற்கொண்டது. ஆனால் 2014ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது. அதற்கு பதிலாக 2016ம் ஆண்டில் மொத்தம் ரூ.59 ஆயிரம் கோடியில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்க பிரான்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொண்டது.

மீண்டும் எழும் ரபேல் ஒப்பந்தம் சர்ச்சை.. கர்மாவிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது.. ராகுல் காந்தி
பா.ஜ.க.

பா.ஜ.க.வின் ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரசும், ராகுல் காந்தியும் பல ஆண்டுகளாக குற்றம் சாட்டி வந்தனர். ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் ரபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என மோடி அரக்கு நீதிமன்றம் நற்சான்றிதழ் வழங்கியது. ஆனால் ராகுல் காந்தி தொடர்ந்து ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டி வருகிறார். இதற்கிடையே பிரான்ஸின் டசால்ட் நிறுவனம் இந்திய அரசுடன் மேற்கொண்ட ஒப்பந்தப்படி இதுவரை 4 கட்டங்களாக மொத்தம் 14 விமானங்களை இந்தியாவுக்கு அனுப்பி விட்டது.

மீண்டும் எழும் ரபேல் ஒப்பந்தம் சர்ச்சை.. கர்மாவிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது.. ராகுல் காந்தி
ரபேல் போர் விமானம்

இந்நிலையில், பிரான்ஸ் ஊடகங்களில், இந்திய அரசிடமிருந்து ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை பெறுவதற்காக டசால்ட் நிறுவனம் சார்பில் இடைத்தரகருக்கு 11 லட்சம் யூரோக்கள் வழங்கப்பட்டதாக செய்தி வெளியானது. இந்த செய்தி ரபேல் ஒப்பந்தம் மீதான சந்தேகத்தை மீண்டும் கிளப்பியுள்ளது. அதேசமயம் இந்த செய்தியை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று பா.ஜ.க. மறுத்து விட்டது. இந்நிலையில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டிவிட்டரில், கர்மா என்பது ஒருவரின் செயல்பாடுகளின் கணக்கு நோட்டு. இந்த கர்மாவிலிருந்து யாரும் தப்பிக்கவில்லை என பதிவு செய்து இருந்தார்.