அயோத்தி ராமர் கோயில் நிலவிவகாரம்.. கடவுள் ராமர் பெயரில் ஏமாற்றுவது குற்றம்.. ராகுல் காந்தி

அயோத்தி ராமர் கோயில் நிலவிவகாரம்.. கடவுள் ராமர் பெயரில் ஏமாற்றுவது குற்றம்.. ராகுல் காந்தி

அயோத்தி ராமர் கோயிலுக்கு நில வாங்கியதில் மோசடி நடந்துள்ளதாக எழுந்துள்ள புகாரையடுத்து, கடவுள ராமர் பெயரில் ஏமாற்றுவது குற்றம் என ராகுல் காந்தி தெரிவித்தார்.

ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தலைமையில் இந்துக்களின் கனவான ராமர் கோயிலின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜைகளுடன் அடிக்கல் நாட்டப்பட்டு அங்கு ராமா் கோயில் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அயோத்தி ராமர் கோயில் நிலவிவகாரம்.. கடவுள் ராமர் பெயரில் ஏமாற்றுவது குற்றம்.. ராகுல் காந்தி
சஞ்சய் சிங் எம்.பி.

இந்த சூழ்நிலையில், ஆம் ஆத்மியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் ராமர் கோயில் தொடர்பாக ஒரு பகீர் குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்தார். அதாவது, அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை ராமர் கோயிலுக்காக ரூ.2 கோடி மதிப்புள்ள நிலத்தை ரூ.18.5 கோடிக்கு வாங்கியுள்ளது. பத்திர பதிவின்போது நிலத்தின் மதிப்பு ரூ.2 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் 5 நிமிடங்களுக்கு பிறகு விற்பனையாளருக்கு கூடுதலாக ரூ.16.5 கோடி செலுத்தப்பட்டது என்று தெரிவித்தார்.

அயோத்தி ராமர் கோயில் நிலவிவகாரம்.. கடவுள் ராமர் பெயரில் ஏமாற்றுவது குற்றம்.. ராகுல் காந்தி
ராமர் கோயில் (மாதிரி படம்)

கடந்த சில தினங்களாக அயோத்தி நில விவகாரம் பெரும பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், கடவுள் ராமரே நீதி, உண்மை மற்றும் மதம். அவர் பெயரில் ஏமாற்றுவது குற்றம். ராமர்-கோயில்-மோசடி என்று பதிவு செய்து இருந்தார். காங்கிரஸ் கட்சி ஏற்கனவே இந்த குற்றச்சாட்டு தொடர்பாக உச்ச நீதிமன்றம் கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.