மக்கள் விரும்புவதை அவர் கவனித்து இருந்தால் நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை இருக்காது.. மோடியை கிண்டலடித்த ராகுல்

மக்கள் விரும்புவதை அவர் கவனித்து இருந்தால் நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை இருக்காது.. மோடியை கிண்டலடித்த ராகுல்

மக்கள் விரும்புவதை அவர் கவனித்து இருந்தால் நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை இருக்காது என்று பிரதமர் மோடியை ராகுல் காந்தி தாக்கினார்.

பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றது முதல் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலியில் மனதின் குரல் (மான் கி பாத்) என்ற நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி இதுவரை 78 மான் கி பாத் நிகழ்ச்சிகளில் அவர் பேசியுள்ளார். மான் கி பாத் நிகழ்ச்சி ஆல் இந்தியா ரேடியோ மற்றும் தூர்தர்ஷனின் பல்வேறு சேனல்கள் வாயிலாக ஒலிப்பரப்படுகிறது.

மக்கள் விரும்புவதை அவர் கவனித்து இருந்தால் நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை இருக்காது.. மோடியை கிண்டலடித்த ராகுல்
மோடியின் மான் கி பாத்

பிரதமர் நரேந்திர மோடி நேற்று 79வது மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் பேசுகையில், திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களின்போது, கொரோனா இன்னும் நம்மிடமிருந்து செல்லவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்க. கொரோனா தொடர்பான நெறிமுறைகளை பின்பற்ற நீங்கள் மறக்க வேண்டாம் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை குறிப்பிட்டு பிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

மக்கள் விரும்புவதை அவர் கவனித்து இருந்தால் நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை இருக்காது.. மோடியை கிண்டலடித்த ராகுல்
கோவிட் தடுப்பூசிகள்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், தடுப்பூசி தொடர்பான புள்ளிவிவரங்கள் அடங்கிய வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்ததுடன், மக்களின் குரலை நீங்கள் (பிரதமர் மோடி) புரிந்து கொண்டிருந்தால், கோவிட் நெருக்கடிக்கு மத்தியில் தடுப்பூசிகளுக்கு பஞ்சமில்லை என்று பதிவு செய்து இருந்தார். கடந்த சில தினங்களாக தடுப்பூசி பற்றாக்குறையை குறிப்பிட்டு மத்திய அரசை ராகுல் காந்தி விமர்சனம் செய்து வருகிறார். ஆனால் தடுப்பூசி பற்றாக்குறை இல்லை என்று மத்திய அரசு கூறுகிறது.