ஜி.டி.பி. சரிவுக்கு காரணமே மோடி அரசின் கபார் சிங் டேக்ஸ்தான்… மத்திய அரசை தொடர்ந்து தாக்கும் ராகுல் காந்தி

 

ஜி.டி.பி. சரிவுக்கு காரணமே மோடி அரசின் கபார் சிங் டேக்ஸ்தான்… மத்திய அரசை தொடர்ந்து தாக்கும் ராகுல் காந்தி

ஜி.டி.பி. இதுவரை இல்லாத அளவுக்கு 23.9 சதவீதம் வீழ்ச்சி கண்டதற்கு மோடி அரசின் ஜி.எஸ்.டி.தான் முக்கிய காரணம் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்

கடந்த ஜூன் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) இதுவரை இல்லாத அளவுக்கு 23.9 சதவீதம் வீழ்ச்சி கண்டது. இதற்கு மோடி அரசின் ஜி.எஸ்.டி.தான் முக்கிய காரணம் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் ராகுல் காந்தி டிவிட்டரில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வரலாறு காணாத அளவுக்கு சரிவு கண்டதற்கு மோடி அரசின் கபார் சிங் டேக்ஸ் (ஜி.எஸ்.டி) மற்றொரு முக்கிய காரணம். அது பல லட்சக்கணக்கான சிறு வர்த்தகம், வேலைகள், இளைஞர்கள் மற்றும் மாநிலங்களின் பொருளாதார நிலவரங்கள் போன்றவற்றை அழித்துள்ளது. ஜி.எஸ்.டி. என்றால் பேரழிவு என பதிவு செய்து இருந்தார். மேலும் அவர் பேசிய வீடியோ ஒன்றையும் அதில் பதிவேற்றம் செய்து இருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ஜி.டி.பி. சரிவுக்கு காரணமே மோடி அரசின் கபார் சிங் டேக்ஸ்தான்… மத்திய அரசை தொடர்ந்து தாக்கும் ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ஜி.எஸ்.டி. என்பது பொருளாதாரத்தின் அமைப்புசாரா துறை மீதான இரண்டாவது தாக்குதல். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் யோசனைதான் ஜி.எஸ்.டி., அது ஒரே வரி, குறைந்தபட்ச வரி மற்றும் எளிமையான வரியாக இருக்கும் என வெளிப்படுத்தப்பட்டது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜி.எஸ்.டி.) முற்றிலும் வேறுப்பட்டது அதில் 28 சதவீதம் வரை 4 விதமான வரிகள் உள்ளன. அது மிகவும் சிக்கலானது மற்றும் பலரால் எளிதால் புரிந்து கொள்ள முடியாது. தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜி.எஸ்.டி.யின் கீழ் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களால் கணக்கை தாக்கல் செய்ய முடியவில்லை. ஆனால் பல பெரிய நிறுவனங்கள் எளிதில் 5 முதல் 15 கணக்காளர்களின் உதவியுடன் ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்து விடுகின்றனர்.

ஜி.டி.பி. சரிவுக்கு காரணமே மோடி அரசின் கபார் சிங் டேக்ஸ்தான்… மத்திய அரசை தொடர்ந்து தாக்கும் ராகுல் காந்தி
ஜி.எஸ்.டி.

ஜி.எஸ்.டி.யில் 4 வகையான விகிதங்கள் உள்ளன ஏனென்றால் அடையக்கூடிய மற்றும் வளங்களை கொண்டவர்கள் அமைப்பை கையாளுவதை அரசாங்கம் விரும்புகிறது. அடைய முடியாத மற்றும் வளங்கள் இல்லாதவர்கள் எதையும் செய்ய முடியாது. யார் வளமானவர்கள்? 15 முதல் 20 பெறுநிறுவனங்கள் மற்றும் அவர்கள் விரும்பும் எந்த மாற்றங்களும், ஜி.எஸ்.டி. ஆட்சியின் கீழ் அவை மாறக்கூடும். தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜி.எஸ்.டி.யின் முடிவு என்ன? முதல் முறையாக, ஜி.எஸ்.டி.யால் திரட்டப்பட்ட பணத்தை மத்திய அரசால் மாநிலங்களுக்கு கொடுக்கமுடியவில்லை. அனைத்து மாநில அரசுகளாலும் ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு சம்பளம் போட முடியவில்லை. ஆகையால் ஜி.எஸ்.டி. தோல்வி அடைந்தது. இது ஏழைகள் மற்றும் குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மீதான தாக்குதல், நாம் அதற்கு எதிராக நிற்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் பேசியுள்ளார்.