தொழிலதிபர்களின் கடனை தள்ளுபடி செய்த தொகையில் 11 கோடி குடும்பங்களுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கலாம்.. ராகுல் காந்தி

தொழிலதிபர்களின் கடனை தள்ளுபடி செய்த தொகையில் 11 கோடி குடும்பங்களுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கலாம்.. ராகுல் காந்தி

மோடி அரசு 2020ம் ஆண்டில் தொகையில் 11 கோடி குடும்பங்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வழங்கலாம் என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தற்போது வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அங்கு இருந்தாலும் பிரதமர் மோடி தலைமையிலான அரசை தொடர்ந்து விமர்சனம செய்து வருகிறார். தற்போது இந்த ஆண்டில் சில தொழிலதிபர்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதையும், கோவிட்-19 இடர்பாடு காலத்தில் ஏழைகளுக்கு பணம் வழங்காததையும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

தொழிலதிபர்களின் கடனை தள்ளுபடி செய்த தொகையில் 11 கோடி குடும்பங்களுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கலாம்.. ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ராகுல் காந்தி இது தொடர்பாக டிவிட்டரில், 2020ம் ஆண்டில் மோடி அரசு சில தொழிலதிபர்களின் ரூ.2.37 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளது. இந்த தொகையை, சோதனையான கோவிட் காலங்களில் 11 கோடி குடும்பங்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வழங்கி இருக்கலாம். இதுதான் மோடி ஜியின் வளர்ச்சி குறித்த உண்மை என்று பதிவு செய்து இருந்தார்.

தொழிலதிபர்களின் கடனை தள்ளுபடி செய்த தொகையில் 11 கோடி குடும்பங்களுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கலாம்.. ராகுல் காந்தி
பணம்

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியின் பல விவசாயிகள் ஒரு மாதத்துக்கு மேலாக போராடி வருகின்றனர். ஆனால் வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது என்று மோடி அரசு உறுதியாக தெரிவித்து விட்டது. விவசாயிக்கு எதிரானவர், நட்பு முதலாளிகளால் இயக்கப்படுகிறார் மற்றும் ஆணவம் போன்ற காரணங்களால்தான் மோடி வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுக்கிறார் என்று ராகுல் கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.