ராகுல் காந்திக்கு நெருக்கமான புள்ளியை வளைத்துப் போட்ட பாஜக – அதிர்ச்சியில் காங்கிரஸ்!

 

ராகுல் காந்திக்கு நெருக்கமான புள்ளியை வளைத்துப் போட்ட பாஜக – அதிர்ச்சியில் காங்கிரஸ்!

இந்தியாவின் ஹார்ட்பீட்டான உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி அரசின் ஆட்சிக்காலம் விரைவில் முடிவடையவிருக்கிறது. 2022ஆம் ஆண்டு திட்டமிட்டபடி உபியில் தேர்தல் நடத்தியே தீருவோம் என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறது. இதனால் அங்கு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. கொரோனா பரவலுக்கு மத்தியிலும் கட்சி தாவல், கூட்டணிப் பேச்சுகள் மெல்ல மெல்ல பரவ தொடங்கியிருக்கின்றன. பாஜகவை பொறுத்தவரை உபியில் யோகியை தவிர்த்த பெரும் செல்வாக்கு கொண்ட தலைவர்கள் கிடையாது.

ராகுல் காந்திக்கு நெருக்கமான புள்ளியை வளைத்துப் போட்ட பாஜக – அதிர்ச்சியில் காங்கிரஸ்!
ராகுல் காந்திக்கு நெருக்கமான புள்ளியை வளைத்துப் போட்ட பாஜக – அதிர்ச்சியில் காங்கிரஸ்!

மோடிக்கு அடுத்தப்படியாக இந்துத்துவ கொள்கைகளைத் தூக்கிப்பிடிக்கும் தலைவராக அவர் இருக்கிறார். இதனால் அவரை வருங்கால பிரதமராக்க ஆர்எஸ்எஸ் இப்போதே அடிமட்ட அளவில் வேலை பார்க்க தொடங்கிவிட்டது. ஆகவே அவர் தான் பாஜகவின் முதல்வர் வேட்பாளர். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இன்னொரு பக்கம் அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோரும் திட்டம் தீட்டி வருகின்றனர். ஆனால் தற்போது காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கட்சியில் ராகுல் காந்திக்கு மிகவும் நெருங்கிய நபராக வலம் வந்த உபியை சேர்ந்த ஜிதின் பிரசாதா திடீரென்று பாஜகவில் இணைந்துள்ளார். இன்று டெல்லி பாஜக அலுவலகத்தில் அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் ஜிதின் பிரசாதா பாஜகவில் இணைந்தார். அவருக்கு பியுஷ் கோயல் சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவையும் ஜிதின் பிரசாதா சந்தித்து வாழ்த்து பெற்றார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் அரசியல் ஆலோசகராகப் பணியாற்றியவரான ஜிதேந்திர பிரசாத்தின் மகன் தான் ஜிதின் பிரசாதா.

ராகுல் காந்திக்கு நெருக்கமான புள்ளியை வளைத்துப் போட்ட பாஜக – அதிர்ச்சியில் காங்கிரஸ்!

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகிய பின் சோனியா காந்தி இடைக்கால தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இரண்டு வருடமாகியும் அவர் இடைக்கால தலைவராகவே தொடர்கிறார். இன்னமும் முழுநேர தலைவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இது காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது. இவ்விவகாரத்தில் அக்கறை கொண்ட குலாம் நபி ஆசாத், கபில் சிபல் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் 23 பேர் நிலையான தலைமையைத் தேர்ந்தெடுக்குமாறு சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருந்தனர். அவர்களில் ஒருவர் தான் ஜிதின் பிரசாதா.