அந்த ரூ.23 லட்சம் கோடி எங்கே மோடி? ராகுல் கேள்வி

 

அந்த ரூ.23 லட்சம் கோடி எங்கே மோடி? ராகுல் கேள்வி

பிரதமரின் தவறான பொருளாதார கொள்கையால் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்ந்திருப்பதாக ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

அந்த ரூ.23 லட்சம் கோடி எங்கே மோடி? ராகுல் கேள்வி

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, “பிரதமர் மோடியும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி உயர்கிறது, உயர்கிறது என்கிறார்கள். GDP என்பதற்கான அர்த்தம் எனக்கு இப்போது தான் புரிகிறது. GDP என்றால் “GAS-DIESEL-PETROL” விலை உயர்வு என இப்போதுதான் எனக்கு புரிகிறது.

கடந்த 2014ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி இந்தியாவில் ஆட்சியை விட்டு வெளியேறிய போது சிலிண்டர் விலை 410 ரூபாயாக இருந்தது. ஆனால் இப்போது 885 ரூபாய் இது கிட்டத்தட்ட 116% விலை உயர்வு ஆகும். இதேபோல், பெட்ரோல் விலை 2014-ல் 71.5 ரூபாயாக இருந்தது. ஆனால் இப்போது 101 ரூபாய் இது 42% விலை உயர்வு, டீசல் விலை 2014ல் லிட்டர் 57 ரூபாயாக இருந்தது. ஆனால் 2021ல் இப்போது 88 ரூபாயாக உள்ளது.

அந்த ரூ.23 லட்சம் கோடி எங்கே மோடி? ராகுல் கேள்வி

மிக முக்கியமாக 2014ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்து வெளியேறிய போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 105 டாலராக இருந்தது, அதேநேரத்தில் இந்தியாவில் பெட்ரோல் விலை 71 ஆக இருந்தது. ஆனால், இப்போது சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் 71 டாலராக குறைந்து இருந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் விலை 105 ரூபாயாக உயர்ந்து உள்ளது. பெட்ரோல் , டீசல் மற்றும் எரிபொருள் விலை உயர்வினால் மத்திய அரசுக்கு கிடைத்த 23 லட்சம் கோடி ரூபாய் எங்கே சென்றது?. இந்த ஆண்டில் மட்டும் 190 ரூபாய் அளவுக்கு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.

இந்தியாவின் தற்போதைய நிலை 1991 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை போல் உள்ளது. திட்டங்களை முன்னெடுப்பதில் பேச்சு அளவில் மட்டும் இல்லாமல் செயல் அளவில் இருக்க வேண்டும். இந்தியாவை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீட்க “புதிய தொலைநோக்கு திட்டத்தை” செயல்படுத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.” என வலியுறுத்தினார்.