ராகுல் காந்தி – ஜே.பி. நட்டா தமிழகம் வருகை : கூட்டணி கணக்குகள் மாறுமா?

 

ராகுல் காந்தி – ஜே.பி. நட்டா தமிழகம் வருகை : கூட்டணி கணக்குகள் மாறுமா?

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் திமுக – அதிமுக கட்சிகள் தங்கள் கூட்டணியை வலுப்படுத்திக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் நட்டாவும் தமிழகம் வருகிறார்கள். இந்த இருவரும் வரும் காரணங்கள் வேறு வேறாக இருக்கலாம். ஆனால், வருகையின் பின்னணி கூட்டணி மாற்றம் நடக்குமா என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

ராகுல் காந்தி – ஜே.பி. நட்டா தமிழகம் வருகை : கூட்டணி கணக்குகள் மாறுமா?

அதிமுகவைப் பொறுத்தவரை அத்தோடு பாஜக உறுதியாக இருக்கிறது என்பதில் மாற்றம் இல்லை. ஆனால், பாஜக 40 தொகுதிகள் வரை எதிர்பாக்கிறது. அப்படிப் போட்டியிடும் பட்சத்தில்தான் குறிப்பிட்ட எண்ணிக்கையில் எம்.ஏ.ஏக்கள் பாஜகவுக்குக் கிடைக்கும் என நினைக்கிறது. சமீபத்தில் பாஜகவின் வானதி சீனிவாசன் பேசும்போதுகூட, ‘தமிழகத்தில் பாஜக எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் இருக்கும்’ என்று தெரிவித்திருந்தார். குறைவான இரட்டை இலக்கம் என்றால்கூட 10 எம்.எல்.ஏக்கள். இது குறித்து நட்டா பேசுவார் என்று தெரிகிறது.

மேலும், சசிகலாவை அதிமுகவுடன் இணைப்பது தொடர்பாக அதிமுக தலைமையின் மனவோட்டத்தைக் கணிக்கவும் செய்யப்படுமாம். ஒருவேளை இழுபறி நிலை வந்தால் துணை முதல்வர் எனும் அளவுக்குப் பேசப்படலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது. பாமக – அதிமுக கூட்டணியில் சிக்கல் வரும்பட்சத்தில் சமரசம் செய்யவும் திட்டமாம்.

ராகுல் காந்தி – ஜே.பி. நட்டா தமிழகம் வருகை : கூட்டணி கணக்குகள் மாறுமா?

ராகுல் காந்தி வருகையால் திமுகவின் பெரிய சலசலப்பு வர வாய்ப்பில்லை. சோனியா காந்தியைப் பொறுத்தவரை திமுகவோடு கூட்டணி உடையக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். மேலும், தமிழ்நாட்டிலிருந்து காங்கிரஸ்க்கு 9 எம்.பிகள் கிடைத்ததில் அவருக்கு ஹேப்பிதான். அதனால், சட்டமன்ற தொகுதி பேரத்தில் திமுகவின் முடிவில் சிக்கல் ஏற்படுத்த வேண்டாம் என்றே சொல்லி வருகிறாராம்.

ஆனால், தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள், குறைந்தது 40 தொகுதிகளாவது வாங்கி விட என சொல்லி வருகிறார்களாம். திமுக தரப்பில் 15- 25 க்குள் ஒரு எண்ணிக்கையைத் தாண்டும் எண்ணம் இல்லையாம். அதுவும் 15- 20க்குள் முடிக்குமாறு உதயநிதி கறாராகச் சொல்லி வருகிறாராம். இதுபற்றி ராகுல் காந்தி மேலோட்டமாகப் பேச வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. கூட்டணி உடைவதற்கு காங்கிரஸ் காரணமாக இருக்கக்கூடாது என்பதே டெல்லி காங்கிரஸ் தலைமையின் நினைப்பாம்.