ராகுல் காந்தி மீண்டும் காஷ்மீர் பயணம்.. ஒரு மாதத்துக்குள் 2வது முறையாக செல்கிறார்

 

ராகுல் காந்தி மீண்டும் காஷ்மீர் பயணம்.. ஒரு மாதத்துக்குள் 2வது முறையாக செல்கிறார்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இம்மாதம் 9 மற்றும் 10ம் தேதிகளில் ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஒரு மாத காலத்துக்குள் 2வது முறையாக அங்கு ராகுல் காந்தி செல்ல உள்ளார்.

2019 ஆகஸ்ட் 5ம் தேதியன்று ஜம்மு அண்டு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறந்து அந்தஸ்து நீக்கப்பட்டு, அந்த மாநிலம் ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. புதிய யூனியன் பிரதேசங்கள் உருவான 2 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக கடந்த ஆகஸ்ட் 10ம் தேதியன்று ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன்பிரதேசத்துக்கு ராகுல் காந்தி சென்றார். அப்போது காங்கிரஸ் கட்சி தொண்டர்களுடன் சந்திப்பை மேற்கொண்டார்.

ராகுல் காந்தி மீண்டும் காஷ்மீர் பயணம்.. ஒரு மாதத்துக்குள் 2வது முறையாக செல்கிறார்
காங்கிரஸ்

மேலும் கந்தர்பாலில் உ்ள்ள காஷ்மீர் பண்டிதர்களின் நம்பிக்கையின் மையமான கீர் பவானி கோயில் மற்றும் ஹஸ்தரதால் தர்கா ஆகியோருக்கு சென்று வந்தார். இந்நிலையில் ராகுல் காந்தி மீண்டும் ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகையில், இம்மாதம் 9 மற்றும் 10ம் தேதிகளில் ஜம்மு அண்டு காஷ்மீரில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

ராகுல் காந்தி மீண்டும் காஷ்மீர் பயணம்.. ஒரு மாதத்துக்குள் 2வது முறையாக செல்கிறார்
மா வைஷ்ணோ தேவி கோயில்

இந்த சுற்றுப்பயணத்தின்போது, காங்கிரஸ் தொண்டர்களை ஊக்குவிப்பார். மேலும் ரியாசி மாவட்டத்தில் திரிகூட மலையில் அமைந்துள்ள மா வைஷ்ணோ தேவி கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார் என்று தெரிவித்தன. ராகுல் காந்தி அண்மையில் காஷ்மீர் குறித்து பேசுகையில், மாநில அந்தஸ்து மீட்கப்பட வேண்டும். ஜனநாயக செயல்முறை அதாவது சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.