நெருங்கும் தேர்தல்.. பஞ்சாப் காங்கிரஸ் உட்கட்சி மோதலை முடிவுக்கு கொண்டு வர களத்தில் இறங்கிய ராகுல் காந்தி

நெருங்கும் தேர்தல்.. பஞ்சாப் காங்கிரஸ் உட்கட்சி மோதலை முடிவுக்கு கொண்டு வர களத்தில் இறங்கிய ராகுல் காந்தி

அடுத்த ஆண்டு பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால், அம்மாநில காங்கிரஸின் உட்கட்சி பூசலை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், ராகுல் காந்தி தனது வீட்டில் அம்மாநில காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து வருகிறார்.

நம் நாட்டில் சுமார் 70 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த காங்கிரஸ் கட்சியின் இன்றைய நிலைமை மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளது. பஞ்சாப் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில்தான் காங்கிரசின் ஆட்சி நடைபெறுகிறது. பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்குக்கும், காங்கிரஸ் எம்.எல்.ஏ. நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையிலான கருத்து வேறுபாடு காரணமாக அம்மாநில காங்கிரஸில் உள்கட்சி மோதல் வெடித்தது.

நெருங்கும் தேர்தல்.. பஞ்சாப் காங்கிரஸ் உட்கட்சி மோதலை முடிவுக்கு கொண்டு வர களத்தில் இறங்கிய ராகுல் காந்தி
சோனியா காந்தி

பஞ்சாப் காங்கிரசில் உட்கட்சி பூசலை சரிசெய்யும் நோக்கில் மல்லிகார்ஜூன் கார்கே, பஞ்சாப் காங்கிரஸ் பிரிவு தலைவர் சுனில் ஜாகர் உள்பட 3 பேர் கொண்ட குழுவை சோனியா காந்தி அமைத்தார். அண்மையில் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் டெல்லிக்கு 3 நாள் பயணமாக சென்று சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்தார். காங்கிரஸ் குழு விரைவில் நவ்ஜோத் சிங் சித்துவை டெல்லிக்கு அழைத்து பேசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நெருங்கும் தேர்தல்.. பஞ்சாப் காங்கிரஸ் உட்கட்சி மோதலை முடிவுக்கு கொண்டு வர களத்தில் இறங்கிய ராகுல் காந்தி
பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்

இந்த சூழ்நிலையில் பஞ்சாப் காங்கிரஸ் உள்கட்சி பிரச்சினை தீர்க்கும் நோக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது வீட்டில் பஞ்சாப் காங்கிரஸின் முக்கிய தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமையன்று விஜேந்திர சிங்லா, ரானா குர்ஜித் சிங், மாநிலங்களவை எம்.பி. ஷம்ஷர் சிங் தில்லான் மற்றும் எம்.எல்.ஏ. லக்வீர் சிங் ஆகியோர் சந்தித்து பேசினர். இதனால் விரைவில் பஞ்சாப் காங்கிரஸ் உள்கட்சி மோதலுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.