மருத்துவமனைகளில் தடுப்பூசி, ஆக்சிஜன் இல்லை.. பி.எம்.கேர்ஸ் நிதி எங்கே போச்சு? ராகுல் காந்தி கேள்வி

மருத்துவமனைகளில் தடுப்பூசி, ஆக்சிஜன் இல்லை.. பி.எம்.கேர்ஸ் நிதி எங்கே போச்சு? ராகுல் காந்தி கேள்வி

மருத்துவமனைகளில் தடுப்பூசி, ஆக்சிஜன், படுக்கைகள் இல்லை இதற்காக திரட்டப்பட்ட பி.எம்.கேர்ஸ் நிதி எங்கே போச்சு என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
நம் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு 2 லட்சத்தை தாண்டி விட்டது. அதேசமயம் மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு, லாக்டவுன் போன்ற கட்டுப்பாடுகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

மருத்துவமனைகளில் தடுப்பூசி, ஆக்சிஜன் இல்லை.. பி.எம்.கேர்ஸ் நிதி எங்கே போச்சு? ராகுல் காந்தி கேள்வி
கோவிட்-19 தடுப்பூசி

45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசியை போடுவதை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு கடந்த 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை தடுப்பூசி திருவிழாவை நடத்தியது. இருப்பினும் பல மாநிலங்கள் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை, ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், படுக்கைகள் இல்லாமல் தடுமாறி வருகின்றன. இதனை குறிப்பிட்டு மத்திய அரசின் தடுப்பூசி திருவிழா போலித்தனமானது என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

மருத்துவமனைகளில் தடுப்பூசி, ஆக்சிஜன் இல்லை.. பி.எம்.கேர்ஸ் நிதி எங்கே போச்சு? ராகுல் காந்தி கேள்வி
பி.எம்.கேர்ஸ்

ராகுல் காந்தி டிவிட்டரில், மருத்துவமனைகளில் பரிசோதனைகள் இல்லை, படுக்கைகள் இல்லை, வென்டிலேட்டர்கள் இல்லை, ஆக்சிஜன் இல்லை, தடுப்பூசியும் இல்லை. ஆனால் ஒரு (தடுப்பூசி) திருவிழாவை போலியாக நடத்தியது. பி.எம்.கேர்ஸ்? என பதிவு செய்து இருந்தார். அதாவது பெரிய அளவில் நிதி திரட்டப்பட்ட பி.எம்.கேர்ஸ் நிதியத்தில் உள்ள நிதி எங்கே அல்லது எப்படி செலவிடப்பட்டது என ராகுல் காந்தி மறைமுகமாக கேள்வி கேட்டுள்ளார்.