ராகுல் காந்தியை அடிக்கடி சந்திக்கும் பிரசாந்த் கிஷோர்.. விரும்பாத காங்கிரஸ் தலைகள்

 

ராகுல் காந்தியை அடிக்கடி சந்திக்கும் பிரசாந்த் கிஷோர்.. விரும்பாத காங்கிரஸ் தலைகள்

பிரசாந்த் கிஷோர் கடந்த ஒரு வாரத்தில் ராகுல் காந்தியை சந்தித்து பேசியிருப்பது அவர் காங்கிரஸ் கட்சியில் சேர ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது.

தேர்தல் வியூகம் அமைப்பாளரான பிரசாந்த் கிஷோர் அண்மையில் தேர்தல் நிர்வாக பணி வேலையிலிருந்த ஒய்வு பெற போவதாக அறிவித்தார். இதனையடுத்து அரசியல் தலைவர் புதிய அவதாரத்தை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், கடந்த ஒரு வாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பிரசாந்த் கிஷோர் குறைந்தபட்சம் 3 முறை சந்தித்து பேசியதாக தகவல். அப்போது காங்கிரசின் மறுமலர்ச்சி குறித்து அவரிடம் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

ராகுல் காந்தியை அடிக்கடி சந்திக்கும் பிரசாந்த் கிஷோர்.. விரும்பாத காங்கிரஸ் தலைகள்
ராகுல் காந்தி

இந்த சந்திப்பு அனைத்தும் ராகுல் காந்தியின் வீட்டில் நடைபெற்றது. இந்த ஒவ்வொரு சந்திப்பிலும் அம்பிகா சோனி, கே.சி.வேணுகோபால் மற்றும் ஏ.கே. அந்தோணி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். இந்த சந்திப்புகளுக்கு பிறகு பிரசாந்த் கிஷோரை காங்கிரஸ் கட்சியில் சேர்ப்பது குறித்து ராகுல் காந்தி மூத்த தலைவர்களிடம் கருத்து கேட்டுள்ளார். பிரசாந்த் கிஷோரை கட்சியில் சேர்ப்பதில் மாறுப்பட்ட கருத்துகள் மூத்த தலைவர்களிடம் நிலவுகிறது.

ராகுல் காந்தியை அடிக்கடி சந்திக்கும் பிரசாந்த் கிஷோர்.. விரும்பாத காங்கிரஸ் தலைகள்
காங்கிரஸ்

காங்கிரஸ் தலைவர்களில் ஒரு சிலர், பிரசாந்த் கிஷோரை மிகைப்படுத்தப்பட்ட நபராக கருதுகின்றனர். மேலும் உத்தர பிரதேசத்தில் 2017 சட்டப்பேரவை தேர்தலின்போது கடைசி நேரத்தில் சமாஜ்வாடியுடன் கூட்டணி வைக்க வைத்து கட்சியின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தார் என்று தங்களது தரப்பு கருத்தை தெரிவித்துள்ளனர். அதேசமயம் பல தலைவர்கள் பிரசாந்த் கிஷோரை கட்சியில் சேர்க்க பச்சைக்கொடி காட்டியுள்ளனர். ஆனால் கட்சியின் முடிவுகளை அவரிடம் முழுமையாக ஒப்படைக்கக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். இருப்பினும் இறுதி முடிவை ராகுல் காந்தி எடுக்க வேண்டும் கூறி விட்டனர் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போதைய நிலவரப்படி, பிரசாந்த் கிஷோர் காங்கிரசுக்கு வருவது உறுதி என தகவல்.