வைரலாகி வரும் ராகுல் காந்தியின் ஒரே ஒரு போட்டோ… பிட்னஸ் பார்த்து அசந்து போன நெட்டின்சன்கள்..

 

வைரலாகி வரும் ராகுல் காந்தியின் ஒரே ஒரு போட்டோ… பிட்னஸ் பார்த்து அசந்து போன நெட்டின்சன்கள்..

கடந்த சில தினங்களாக ராகுல் காந்தியின் ஒரே ஒரு போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் பல அவர் பிட்னஸ் டிப்ஸ் தரும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் பிம்பமும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி கடந்த சில தினங்களுக்கு முன் கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில், மீன சமுதாயத்தினரிடம் கலந்து உரையாடினார். மேலும் அவர்களுடன் படகில் கடலுக்குள் சென்று வந்தார். கடலில் படகில் சென்று கொண்டு இருந்த ராகுல் காந்தி திடீரென படகிலிருந்து கடலுக்குள் குதித்தார்.

வைரலாகி வரும் ராகுல் காந்தியின் ஒரே ஒரு போட்டோ… பிட்னஸ் பார்த்து அசந்து போன நெட்டின்சன்கள்..
கடலில் நீந்தும் ராகுல் காந்தி

சுமார் 10 நிமிடங்கள் கடலுக்குள் நீந்திய ராகுல் காந்தி பின்பு படகில் ஏறினார். ராகுல் காந்தியின் கடல் பயணம் தொடர்பான பல போட்டோக்கள் ஊடகங்களில் வெளியானது. அந்த போட்டாக்களில் ஒன்று தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. ஈர ஆடையுடன் படகில் ராகுல் காந்தி நிற்கும் அந்த போட்டோதான் தற்போது வைரலாகி வருகிறது. அந்த போட்டோவில் ராகுல் காந்தியின் உடம்போடு ஈரமான டி.சர்ட் ஒட்டி வயிற்று தசைகள் (கட்ஸ்) தெளிவாக தெரிகிறது.

வைரலாகி வரும் ராகுல் காந்தியின் ஒரே ஒரு போட்டோ… பிட்னஸ் பார்த்து அசந்து போன நெட்டின்சன்கள்..
விஜேந்தர் சிங்

நல்ல உடற்பயிற்சி செய்பவர்களுக்கு மட்டுமே இது போன்று இருக்கும். ஆக, ராகுல் காந்தி தனது பிட்னஸை நன்றாக வைத்துள்ளார் என்பதை அந்த போட்டோ சொல்லாமல் சொல்கிறது. இந்த போட்டோவை அதிகளவில் பகிர்ந்து வரும் நெட்டின்சன்கள், உடல் பயிற்சி தொடர்பாக டிப்ஸ் தரும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்கும் அந்த படத்தை டிவிட் செய்து, ஒரு குத்துச் சண்டை வீரரின் ஏபிஎஸ் (வயிற்று தசைகள்) என்று பதிவு செய்து இருந்தார்.