மாஸ்க் சரியாக அணியாத இளைஞரை தாக்கிய போலீசார்.. ராகுல் காந்தி கண்டனம்

 

மாஸ்க் சரியாக அணியாத இளைஞரை தாக்கிய போலீசார்.. ராகுல் காந்தி கண்டனம்

மத்திய பிரதேசத்தில் மாஸ்க் சரியாக அணியாத வாலிபரை போலீசார் தாக்கியதற்கு வெட்கக்கேடான மனிதாபிமானமற்ற தன்மை நாடு ஏற்கவில்லை என ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் இந்தூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் உள்ள தனது தந்தைக்கு உணவு எடுத்து சென்றுள்ளார். அவர் சாலையில் நடந்து செல்கையில் மாஸ்க்கை சரியாக அணியாமல் சென்றுள்ளார். அதனை பார்த்த 2 போலீசார் அந்த இளைஞரை தடுத்து நிறுத்தினர். பின் மாஸ்க் சரியாக அணியவில்லை என்பதால் காவல் நிலையத்துக்கு வரும்படி அழைத்துள்ளனர்.

மாஸ்க் சரியாக அணியாத இளைஞரை தாக்கிய போலீசார்.. ராகுல் காந்தி கண்டனம்
இளைஞரை தாக்கும் போலீசார்

ஆனால் அந்த இளைஞர் அவர்களுடன் காவல் நிலையத்துக்கு வர மறுத்துள்ளார். இதனையடுத்து போலீசார் இருவரும் அந்த இளைஞரை சாலையிலேயே சராமரி தாக்கியுள்ளனர். போலீசாரை இளைஞர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாஸ்க் சரியாக அணியாத இளைஞரை தாக்கிய போலீசார்.. ராகுல் காந்தி கண்டனம்
இளைஞரை தாக்கும் போலீசார்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில், இளைஞரை போலீசார் தாக்கும் வீடியோவை பதிவேற்றம் செய்ததுடன், கொரோனா விதிமுறைகளை அமல்படுத்தும் போர்வையில் இதுபோன்ற வெட்கக்கேடான மனிதாபிமானமற்ற தன்மை நாடு ஏற்கவில்லை. பாதுகாக்க வேண்டிய போலீசார் சித்திரவதை செய்தால், பொதுமக்கள் எங்கு செல்வார்கள்? என்று பதிவு செய்து இருந்தார்.