மக்களோடு சாப்பிடும் ராகுல் காந்தி – வைரலாகும் போட்டோ!

 

மக்களோடு சாப்பிடும் ராகுல் காந்தி – வைரலாகும் போட்டோ!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று மதுரை வந்திருந்தார். அவரின் பயணத்தின் ஒரே நோக்கம் அவனியா புரம் ஜல்லிக்கட்டைப் பார்த்து ரசிப்பது மட்டுமே.

நேற்று காலை டெல்லியிலிருந்து விமானத்தில் புறப்பட்ட ராகுல் காந்தி மதுரை வந்தார் ராகுல். அதன்பின் காரில் அவனியாபுரம் சென்ற ராகுல் அங்கே ஜல்லிக்கட்டைப் பார்த்து ரசித்தார். அப்போது பேசிய ராகுல், ‘இந்த விழாவில் இளைஞர்கள் கட்டுப்போப்பாகவும் பாதுகாப்பாவும் பங்கேற்பது மகிழ்ச்சி. நான் இங்கே வந்தது தமிழர் பண்பாட்டையும் வரலாற்றையும் அறிந்துகொள்ளவே’ என்று தெரிவித்தார். மாடு பிடி வீரர்கள் தடுப்பில் ஏறி ராகுல் காந்தியோடு போட்டோ எடுக்க முயன்றனர். பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களைத்தடுக்க என்றபோது ராகுல்காந்தி அதிகாரிகளைத் தடுத்து மாடு பிடி வீரர்களோடு போட்டோ எடுத்துக்கொண்டார்.

மக்களோடு சாப்பிடும் ராகுல் காந்தி – வைரலாகும் போட்டோ!

அது முடிந்ததும், ராகுல் காந்தி மக்களோடு மக்களாக உட்கார்ந்து பொங்கல் சாப்பிட்டார். கல்யாண வீடுகளில் போடப்படும் இரும்பு டேபிளின் மீது எவ்வித துணியோ, பேப்பரோ கூட விரிக்கப்பட வில்லை. ராகுலின் அருகில் ஒரு பாட்டியும் மறுபக்கம் இளம்பெண் ஒருவரும் உட்கார்ந்து சாப்பிட்டனர். அருகில் இருந்த பெண்ணிடம் மிக இயல்பாகப் பேசிக்கொண்டே சாப்பிட்ட வீடியோ சமூக ஊடகத்தில் வெளியானது.

மக்களோடு சாப்பிடும் ராகுல் காந்தி – வைரலாகும் போட்டோ!

மேலும், அவர் தனது இருக்கையிலிருந்து இரண்டு இலைகள் தாண்டி ஒரு குழந்தையும் அம்மாவும் உட்கார்ந்திருந்தனர். ஆனால், அவர்களின் இலைகளில் உணவு ஏதும் பரிமாறப்பட வில்லை. அதைக் கவனித்த ராகுல் அவர்களுக்கு உடனே உணவு பரிமாறச் சொன்னார்.

மக்களோடு சாப்பிடும் ராகுல் காந்தி – வைரலாகும் போட்டோ!

ராகுலின் இயல்பான நடத்தைகள், மக்களோடு அமர்ந்து உணவு அருந்திய போட்டோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவுகின்றன. எதிர்கட்சிகளைச் சேர்ந்த சிலர் கிண்டலும் செய்கின்றனர். ஆனால், பெரும்பாலும் ஆதரவு கருத்துகளே அப்படத்திற்கு கிடைத்து வருகின்றன.

மக்களோடு சாப்பிடும் ராகுல் காந்தி – வைரலாகும் போட்டோ!

ராகுல் காந்தி நேற்று ஜல்லிக்கட்டு போட்டியைப் பார்வையிட்ட போது திமுகவின் இளைஞரனி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் உடன் இருந்தார். ராகுல் காந்தி பேசியதும் உதயநிதியும் சில நிமிடங்கள் பேசினார். அது முடிந்ததும் இருவரும் அரசியல் குறித்து பேசியதாகவும் சொல்லப்படுகிறது.