“மோடி அரசு கொரோனாவோடு பெட்ரோல், டீசல் விலையையும் கட்டவிழ்த்துவிட்டுள்ளது” ராகுல் காந்தி கடும் விமர்சனம்!

“மோடி அரசு கொரோனாவோடு பெட்ரோல், டீசல் விலையையும் கட்டவிழ்த்துவிட்டுள்ளது” ராகுல் காந்தி கடும் விமர்சனம்!

இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்று பரவல் மாபெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் முடக்கப்பட்டு வருமானத்திற்கு வழியற்று இருக்கிறார்கள். அன்றாட உணவுக்குச் சமைப்பதற்காகப் பொருள்கள் வாங்குவதுகூட பெரும்பாலான மக்களுக்குச் சிரமமாகவே உள்ளது. அதை மீறியும் எப்படியாவது பணம் சேர்த்து கடைக்குச் சென்றால் மளிகைப் பொருள்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. காய்கறிகளின் விலையும்கூட.

“மோடி அரசு கொரோனாவோடு பெட்ரோல், டீசல் விலையையும் கட்டவிழ்த்துவிட்டுள்ளது” ராகுல் காந்தி கடும் விமர்சனம்!

மளிகை பொருள்கள் மற்றும் காய்கறிகளின் விலையேற்றத்துக்குப் பொதுவாகக்கூறப்படும் காரணம், பொருள் வரத்து குறைவு; ஆனால் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால், இப்போது அந்தக் காரணத்தோடு இன்னொன்றும் வலுவாகச் சேர்ந்துவிட்டது. அதுதான் பெட்ரோல், டீசல் விலையேற்றம். கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவுக்குக் குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையவே இல்லை. மாறாக தினந்தோறும் இவற்றின் விலை அதிரிகரித்துக்கொண்டே செல்கின்றன. புது டெல்லியில் பெட்ரோலின் விலையை விட 12 பைசா அதிகமாக விற்கப்படுகிறது.

“மோடி அரசு கொரோனாவோடு பெட்ரோல், டீசல் விலையையும் கட்டவிழ்த்துவிட்டுள்ளது” ராகுல் காந்தி கடும் விமர்சனம்!

கொரோனா பரவல் மற்றும் பெட்ரோலிய விலையேற்றம் குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து ட்விட் செய்திருக்கிறார். அதில் “மோடி அரசு கொரோனா வைரஸையும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையையும் கட்டவிழ்த்து உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், கொரோனா பரவல், பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றத்தின் வரைபடத்தை அத்துடன் இணைத்துள்ளார்.