எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை!

 

எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை!

இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் மென்பொருள் இந்தியாவில் உள்ள பல முக்கிய தலைவர்கள், அதிகாரிகளின் தொலைபேசி அழைப்புகளை ஒட்டி கேட்டு வருவதாக செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக இது குறித்து நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.பெகாசஸ் மென்பொருளை இந்திய அரசாங்கம் பயன்படுத்தியதா? இது குறித்து ஏற்கனவே மத்திய அரசுக்குத் தெரியுமா என பல்வேறு கேள்விகளை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி முன்வைத்தார்.

எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை!

எதிர்க்கட்சிகள் பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதம் நடத்த நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி வந்த நிலையில் அதற்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. இதனால் மழைக்கால கூட்டத்தொடரில் நாடாளுமன்ற எதிர்கட்சி எம்பிக்கள் அமளியில் ஏற்பட்டு புறக்கணித்து வந்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை!

இந்நிலையில் இன்று ராகுல்காந்தி தலைமையில் எதிர்க் கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். புதுடில்லி அரசியல் சாசன கிளப்பில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பல முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர். இதைத் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்வு, பெகாசஸ் ஒட்டுகேட்டு விவகாரம் உள்ளிட்டவற்றை கண்டித்த ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் சைக்கிளில் நாடாளுமன்றத்துக்கு சென்றனர்.