2வது அலையில் கொரோனாவுக்கு 730 மருத்துவர்கள் பலி.. ராகுல் காந்தி இரங்கல்

 

2வது அலையில் கொரோனாவுக்கு 730 மருத்துவர்கள் பலி.. ராகுல் காந்தி இரங்கல்

கொரோனா வைரஸின் 2வது அலையில் பலியான 730 மருத்துவர்களுக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

நம் நாட்டில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பாதிப்பு கடந்த சில மாதங்களாக தீவிரமாக இருந்தது. கொரோனா வைரஸின் முதல் அலையை காட்டிலும் இரண்டாவது அலை மிகப்பெரிய அச்சுறுதலாக இருந்தது. கொரோனாவால் தினமும் பல ஆயிரம் பேர் இறந்து வருகின்றனர். கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

2வது அலையில் கொரோனாவுக்கு 730 மருத்துவர்கள் பலி.. ராகுல் காந்தி இரங்கல்
இந்திய மருத்துவ சங்கம்

நாடு முழுவதுமாக கொரோனா வைரஸின் 2வது அலையில் மொத்தம் 730 மருத்துவர்கள் பலியாகி உள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. குறிப்பாக பீகார் மற்றும் டெல்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கொரோனாவால் பலியாகி உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கொரோனாவால் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

2வது அலையில் கொரோனாவுக்கு 730 மருத்துவர்கள் பலி.. ராகுல் காந்தி இரங்கல்
கொரோனாவால் பலியான மருத்துவர்கள் பட்டியல்

ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள மாநிலம் வாரியாக கொரோனாவால் இறந்த மருத்துவர்கள் பட்டியலை பதிவேற்றம் செய்து, கொரோனா நெருக்கடியிலிருந்து நம் தேசத்தை காப்பாற்ற தங்கள் உயிரை பணயம் வைத்துள்ள இந்த மருத்துவர்கள் ஒவ்வொருவருக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன். இந்த தியாகிகள் துன்பங்களையும், கஷ்டங்களையும் துணிச்சலாக எதிர்கொண்டனர். ஆனால் ஒரு போதும் கைவிடவில்லை. அவர்களை தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் என்று அழைக்கும் மரியாதை உள்ளவர்களுக்கு எனது இரங்கல் என்று பதிவு செய்து இருந்தார்.