• April
    05
    Sunday

Main Area

Main



எப்போதும் ராகுல் பிரதமராக மாட்டார்: மேனகா காந்தி பரபரப்பு பேட்டி!

மேனகா காந்தி
மேனகா காந்தி

புதுடெல்லி: ராகுல் காந்தி ஒருபோதும் பிரதமராக வர முடியாது என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி கருத்து தெரிவித்துள்ளார். 

மக்களவை தேர்தல்
ec

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க, பாஜக தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன

தென்னிந்தியாவில் போட்டியிட முடிவு செய்தேன்
rahul

அந்த வகையில், வரும் மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடுவது ஏற்கனவே முடிவான நிலையில், அவர் கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இது குறித்து கருத்து  தெரிவித்த ராகுல், 'மத்திய பாஜக அரசும், ஆர்.எஸ்.எஸ் இயக்கமும் தென் இந்தியாவின் கலாச்சாரத்தின்மீது தாக்குதல் நடத்தி வருகின்றது. எனவே தான் தென்னிந்தியாவில் நான் போட்டியிட முடிவு செய்தேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எனக்கு எதிராக கூறும் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் பதில் அளிப்பேன். ஆனால் அவர்களை விமர்சித்து ஒரு வார்த்தை கூட பேச மாட்டேன்' என்றார். அதே சமயம் ராகுல் காந்தி இம்முறை பிரதமராவார் என்று காங்கிரஸ் கட்சியினர் நம்பிக்கையின் உச்சத்தில் உள்ளனர். 

ராகுல் காந்தியால் எப்போதுமே பிரதமராக முடியாது
maneka

இந்நிலையில் பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான மேனகா காந்தி, 'ஏதேனும் அதிசயம் நடைபெறாத வரையில் ராகுல் காந்தியால் எப்போதுமே பிரதமராக முடியாது' என்று கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, யார் வேண்டுமானாலும் இரண்டு தொகுதிகளிலோ அல்லது அதற்கு மேற்பட்ட தொகுதிகளிலோ போட்டியிடலாம். ஆனால் இந்த முறை நானும் எனது கட்சிப் பணியாளர்களும் கடுமையாக உழைத்து வருகிறோம். வெற்றி எங்களுடையதாகவே இருக்கும்' என்று கூறியுள்ளார். 

இதையும் வாசிக்க: சிறுநீர் கழித்ததால் 7 வயது சிறுவனை கொடூரமாக தாக்கிய தாயின் காதலன்: பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்
 

2018 TopTamilNews. All rights reserved.