எதுவும் புரியாத திறமையற்ற மனிதர்.. 4 நபர்களின் சார்பாக அரசை இயக்குகிறார்… மோடியை தாக்கிய ராகுல் காந்தி

எதுவும் புரியாத திறமையற்ற மனிதர்.. 4 நபர்களின் சார்பாக அரசை இயக்குகிறார்… மோடியை தாக்கிய ராகுல் காந்தி

எதுவும் புரியாத திறமையற்ற மனிதர், 4 நபர்களின் சார்பாக ஒரு சிஸ்டத்தை (அரசு நிர்வாகம்) இயக்குகிறார் என்று பிரதமர் மோடியை ராகுல் காந்தி மறைமுகமாக தாக்கினார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், இந்த சட்டங்களை ரத்து செய்ய குடியரசு தலைவா் தலையிடக்கோரியும், காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் விவசாயிகள் மற்றும் பல்வேறு பங்குதாரர்களிடம் சுமார் 2 கோடி கையொப்பங்களை பெற்று இருந்தது. இதனை ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் பிரதிநிதிகள் நேற்று குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்தை சந்தித்து அவரிடம் வழங்கினர். அதன் பிறகு செய்தியாளர்களை ராகுல் காந்தி சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

எதுவும் புரியாத திறமையற்ற மனிதர்.. 4 நபர்களின் சார்பாக அரசை இயக்குகிறார்… மோடியை தாக்கிய ராகுல் காந்தி
ராகுல் காந்தி

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறும் வரை விவசாயிகள் திரும்ப மாட்டார்கள். நாடாளுமன்றத்தின் கூடடுக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டி இந்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். ஜனநாயகமா? நீங்கள் எந்த நாட்டை பற்றி பேசுகிறீர்கள்? இந்தியாவில் ஜனநாயகம் இல்லை. இது (ஜனநாயகம்) உங்கள் கற்பனையில் இருக்கலாம், ஆனால் உண்மையில் இல்லை.

எதுவும் புரியாத திறமையற்ற மனிதர்.. 4 நபர்களின் சார்பாக அரசை இயக்குகிறார்… மோடியை தாக்கிய ராகுல் காந்தி
விவசாயிகள் போராட்டம்

இன்னும் எல்லையில் இருக்கும் சீனா, ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் இந்திய நிலத்தை பறித்தது. பிரதமர் ஏன் இதை பற்றி பேசவில்லை. அவர் ஏன் அமைதியாக இருக்கிறார்? உங்களிடம் எதுவும் புரியாத திறமையற்ற மனிதர் இருக்கிறார். எல்லாவற்றையும் புரிந்து கொள்ளும் 3 அல்லது 4 நபர்களின் சார்பாக ஒரு அரசை இயக்குகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.