மேக் இன் இந்தியாவை ஊக்குவிக்கிறது… ஆனால் சீனாவிடமிருந்து வாங்குகிறது… மோடி அரசை தாக்கிய ராகுல் காந்தி

மேக் இன் இந்தியாவை ஊக்குவிக்கிறது… ஆனால் சீனாவிடமிருந்து வாங்குகிறது… மோடி அரசை தாக்கிய ராகுல் காந்தி

கடந்த மாத மத்தியில் கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்ததையடுத்து, கடந்த 2 வாரங்களுக்கு மேலாக சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் நாடு முழுவதும் ஒலிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சீன இறக்குமதியை வைத்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசை ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

மேக் இன் இந்தியாவை ஊக்குவிக்கிறது… ஆனால் சீனாவிடமிருந்து வாங்குகிறது… மோடி அரசை தாக்கிய ராகுல் காந்தி

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில், உண்மைகள் பொய் சொல்வதில்லை. பா.ஜ.க. சொல்கிறது: மேக் இன் இந்தியா. பா.ஜ.க. செய்கிறது: சீனாவிடமிருந்து வாங்குகிறது என பதிவு செய்து இருந்தார். மேலும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 2வது ஆட்சி காலத்திலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் 5 ஆண்டு ஆட்சி காலத்திலும் இந்தியாவின் மொத்த இறக்குமதியில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சதவீதத்தின் கிராபிக்ஸையும் அந்த டிவிட்டில் இணைத்து இருந்தார்.

மேக் இன் இந்தியாவை ஊக்குவிக்கிறது… ஆனால் சீனாவிடமிருந்து வாங்குகிறது… மோடி அரசை தாக்கிய ராகுல் காந்தி

அந்த கிராபிக்ஸில், 2008 முதல் 2014 வரையிலான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சி காலத்தில் நம் நாட்டின் மொத்த இறக்குமதியில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்தது அதிகபட்சம் 14 சதவீதம் வளர்ச்சி கண்டு இருந்தது. ஆனால் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் ஆட்சி காலத்தில் சீனாவிலிருந்து பொருட்கள் இறக்குமதி செய்வது படிப்படியாக அதிகரித்து 2018ல்18 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.