Home அரசியல் என் அரசியல் வாழ்க்கையே அஸ்தமித்து போனாலும் சீன ஊடுருவல் பற்றி பொய் சொல்ல மாட்டேன்.. ராகுல் காந்தி

என் அரசியல் வாழ்க்கையே அஸ்தமித்து போனாலும் சீன ஊடுருவல் பற்றி பொய் சொல்ல மாட்டேன்.. ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நாட்டின் கொரோனா வைரஸ்ட நிலவரம், இந்தியா-சீனா மோதல், பொருளாதாரம் என நாட்டின் முக்கிய விவகாரங்கள் குறித்து தினந்தோறும் டிவிட்டரில் வீடியோ பதிவேற்றம் செய்து வருகிறார். அந்த வகையில் நேற்று, சீனா குறித்த கடுமையான கேள்விகள் என்ற தலைப்பில் ஒரு வீடியோ பதிவேற்றம் செய்துள்ளார். அதில் சீன ஊடுருவல் தொடர்பாக ராகுல் காந்தி பேசியுள்ளார்.

இந்திய, சீன ராணுவ வீரர்கள்

ராகுல் காந்தி அந்த வீடியோவில் பேசியிருப்பதாவது: லடாக்கில் இந்திய பிரதேச பகுதியை சீன படைகள் ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்று கூறுபவர்கள் தேசியவாத மற்றும் தேசபக்தி கொண்டவர்கள் அல்ல. என் முழு அரசியல் வாழக்கையும் நரகத்திற்கு சென்றாலும், சீனாவின் அத்துமீறல்கள் குறித்த உண்மையை தொடர்ந்து பேசுவேன். இப்போது சீனர்கள் நமது எல்லைக்குள் நுழைந்துள்ளனர் என்பது தெளிவாகிறது. அது என்னை தொந்தரவு செய்கிறது.

ராணுவ வீரர்களுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

அது வெளிப்படையாக என் இரத்தத்தை கொதிக்க வைக்கிறது. வேறு ஒரு நாடு நம் எல்லைக்குள் எப்படி வர முடியும்? எனவே வெளிப்படையாக அரசியல் ரீதியாக எனக்கு இழப்பு ஏற்பட்டாலும் அது பற்றி எனக்கு கவலையில்லை. அதற்கு பிறகு என அரசியல் வாழக்கை இல்லை என்றாலும் எனக்கு கவலையில்லை. ஆனால் இந்திய பிரதேசத் பொறுத்தவரை நான் உண்மையை சொல்ல போகிறேன். சீனர்கள் நம் நாட்டுக்குள் நுழையவில்லை என்று நான் பொய் சொல்ல வேண்டும் என நீங்கள் விரும்பினால் நான் பொய் சொல்ல போவதில்லை. நான் அதை செய்ய மாட்டேன். எனது முழு வாழ்க்கையும் நரகத்திற்கு சென்றாலும் எனக்கு கவலையில்லை. நான் பொய் சொல்லப் போவதில்லை.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Most Popular

“மாஸ்க் போடு ,இல்லேன்னா மண்டையிலே போடு” -மாஸ்க் அணியாதவருக்கு நேர்ந்த கதி

மாஸ்க் போடாமல் சாலையில் சென்ற ஒரு தந்தை மற்றும் மகனை ஒரு வாலிபர் கூட்டம் கடுமையாக தாக்கியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

காதலுக்கு ‘நோ’ சொன்ன சிறுமியை குத்தி கொன்ற 16 வயது சிறுவன்!

13 வயது சிறுமியை மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் சோழப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி...

திருப்பூர்- மின்தடையால் அடுத்தடுத்து உயிரிழப்பு: விசிகவின் மருத்துவமனை முற்றுகை போராட்டம்

மின்தடையால் அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்பட்டதை அடுத்து விசிகவினர் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 22ஆம் தேதி மின்தடை...

6 துப்பாக்கித்தோட்டாக்கள் கண்டுபிடிப்பு: கோவை விமான நிலையத்தில் பரபரப்பு

கோவை விமான நிலையத்தின் கழிப்பறையில் 6 துப்பாக்கித் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை விமான நிலையத்தின் உள்நாட்டு...
Do NOT follow this link or you will be banned from the site!