கல்வானில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு இரங்கல் தெரிவிக்க ஏன் 2 நாட்கள் ஆனது?… ராஜ்நாத்தை கேட்கும் ராகுல் காந்தி…

கல்வானில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு இரங்கல் தெரிவிக்க ஏன் 2 நாட்கள் ஆனது?… ராஜ்நாத்தை கேட்கும் ராகுல் காந்தி…

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த திங்கட்கிழமையன்று மாலை இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் நடைபெற்றது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். ஆனால் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று காலையில்தான் டிவிட்டரில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்து இருந்தார்.

கல்வானில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு இரங்கல் தெரிவிக்க ஏன் 2 நாட்கள் ஆனது?… ராஜ்நாத்தை கேட்கும் ராகுல் காந்தி…

ராஜ்நாத் சிங் அந்த டிவிட்டில், கல்வானில் படையினரின் உயிர் இழப்பு ஆழ்ந்த மன உளைச்சலையும், வேதனையையும் தருகிறது. நம் வீரர்கள் கடமையில் முன்மாதிரியான தைரியத்தையும், வீரத்தையும் வெளிப்படுத்தினர் மற்றும் இந்திய ராணுவத்தின் உயர்ந் மரபுகள்படி தங்களது உயிரை தியாகம் செய்துள்ளனர் என பதிவு செய்து இருந்தார். தற்போது இதனை குறிப்பிட்டு ராஜ்நாத் சிங்கிடம் காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

கல்வானில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு இரங்கல் தெரிவிக்க ஏன் 2 நாட்கள் ஆனது?… ராஜ்நாத்தை கேட்கும் ராகுல் காந்தி…

ராகுல் காந்தி இது தொடர்பாக டிவிட்டரில், உங்களது (ராஜ்நாத் சிங்) டிவிட்டில் சீனாவின் பெயரை குறிப்பிடாமல் ஏன் இந்திய ராணுவத்தை அவமதித்தீர்கள்?. இரங்கல் தெரிவிக்க ஏன் 2 நாட்கள் எடுத்து கொண்டீர்கள்?. வீரர்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர். ஆனால் அதனை மறைத்து ராணுவத்தை ஏன் நட்பு ஊடகங்கள் குற்றம் சாட்ட வேண்டும்?. மத்திய அரசை குற்றம் சாட்டாமல் ராணுவத்தை ஏன் நட்பு ஊடகங்கள் பழி சுமத்தின? என பதிவு செய்து இருந்தார்.