ஏழைகளின் துயரத்திலிருந்து லாபம் சம்பாதிப்பதை நிறுத்துங்க மோடி…. ராகுல் காந்தி ஆவேசம்…

ஏழைகளின் துயரத்திலிருந்து லாபம் சம்பாதிப்பதை நிறுத்துங்க மோடி…. ராகுல் காந்தி ஆவேசம்…

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் ஏறாத நிலையிலும், கடந்த 10 தினங்களாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றன. இதனால் நடுத்தர வர்த்தகத்தினர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மேலும் எரிபொருள் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயமும் உள்ளது. இதனால் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

ஏழைகளின் துயரத்திலிருந்து லாபம் சம்பாதிப்பதை நிறுத்துங்க மோடி…. ராகுல் காந்தி ஆவேசம்…

இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் இளவரசர் ராகுல் காந்தியும் எரிபொருள் விலை உயர்வு தொடர்பாக மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி டிவிட்டரில், பிரதமர் மோடி, ஏழைகளின் துயரத்திலிருந்து லாபம் ஈட்டுவதை நிறுத்துங்க. இந்த துயரமான நேரத்தில் நடுத்தர மற்றும் ஏழைகளுக்கு நேரடியாக பணத்தை வழங்க உத்தரவிடுங்க என ModiStopLootingIndia என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பதிவு செய்து இருந்தார்.

ஏழைகளின் துயரத்திலிருந்து லாபம் சம்பாதிப்பதை நிறுத்துங்க மோடி…. ராகுல் காந்தி ஆவேசம்…

மேலும் அந்த டிவிட்டில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தையும் அதில் பதிவேற்றம் செய்து இருந்தார். கடந்த 10 தினங்களில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5.47ம், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5.80ம் உயர்த்தி உள்ளன.