இந்திய மக்களுக்கா அல்லது குறிப்பிட்ட 3 தொழிலதிபர்களுக்கு நீங்க பிரதமரா? மோடியை கேள்வி கேட்ட ராகுல் காந்தி

இந்திய மக்களுக்கா அல்லது குறிப்பிட்ட 3 தொழிலதிபர்களுக்கு நீங்க பிரதமரா? மோடியை கேள்வி கேட்ட ராகுல் காந்தி

இந்திய மக்களுக்கா அல்லது குறிப்பிட்ட 2-3 தொழிலதிபர்களுக்கு நீங்க பிரதமரா? என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பதற்காக மதுரை வந்தார். அங்கு செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில் கூறியதாவது: நமது பிராந்தியத்துக்குள் சீனா என்ன செய்கிறது? இந்திய எல்லைக்குள் அவர்கள் ஏன் அமர்ந்து இருக்கிறார்கள்? பிரதமர் மோடி ஏன் அது குறித்து ஒன்றும் சொல்லவில்லை? இந்திய பிராந்தியத்துக்குள் சீன துருப்புகள் (ராணுவம்) இருக்கும் உண்மை குறித்து பிரதமர் முழு மவுனமாக இருப்பது ஏன்?

இந்திய மக்களுக்கா அல்லது குறிப்பிட்ட 3 தொழிலதிபர்களுக்கு நீங்க பிரதமரா? மோடியை கேள்வி கேட்ட ராகுல் காந்தி
பிரதமர் மோடி

பா.ஜ.க. அரசு விவசாயிகளை புறக்கணிப்பது மட்டுமல்ல. அவர்களை அழிக்கவும் சதி செய்கிறது ஏனென்றால் அவர்களது சில 2 முதல் 3 நண்பர்கள் ஆதாயம் வேண்டும் என்பதற்கு. விவசாயிகளுக்கு சொந்தமானதை தங்களது 2-3 நண்பர்களுக்கு கொடுக்க அவர்கள் (மோடி அரசு) விரும்புகிறார்கள். அதுதான் நடக்கிறது. என்ன நடக்கிறது என்பதை விளக்க ஒரு வார்த்தை புறக்கணிப்பு மிகவும் பலவீனமானது.

இந்திய மக்களுக்கா அல்லது குறிப்பிட்ட 3 தொழிலதிபர்களுக்கு நீங்க பிரதமரா? மோடியை கேள்வி கேட்ட ராகுல் காந்தி
ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்து ரசித்த ராகுல் காந்தி

நநீங்கள் விவசாயிகளை அடக்குகிறீர்கள். சில வர்த்தகர்களுக்கு நீங்க உதவுகிறீர்கள், கொரோனா வந்தபோது நீங்க சாமானிய மக்களுக்கு உதவி செய்யவில்லை. நீங்க யாருடைய பிரதமர்? நீங்கள் இந்திய மக்களுக்கா அல்லது குறிப்பிட்ட 2-3 தொழிலதிபர்களுக்கா? 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய மத்திய அரசு நிர்பந்திக்கப்படும் என்ற என் வார்த்தை மக்களே குறித்து வைத்து கொள்ளுங்கள், நினைவில் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.