ஒரே ஒரு கேள்வி கேட்ட ராகுல் காந்தி… 8 மணி நேரம் மண்டையை போட்டு குழப்பிய டிவிட்டர்வாசிகள்…

ஒரே ஒரு கேள்வி கேட்ட ராகுல் காந்தி… 8 மணி நேரம் மண்டையை போட்டு குழப்பிய டிவிட்டர்வாசிகள்…

ராகுல் காந்தி நேற்று டிவிட்டரில் ஒரு கேள்வி கேட்டு பதிவு செய்து இருந்தார். சுமார் 8 மணி நேரம் டிவிட்டர்வாசிகள் விடை என்னவாக இருக்கும் என்று தீவிரமாக யோசனை செய்தனர். இறுதியில் ராகுல் காந்தியை அதற்கு பதில் அளித்தார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று காலையில் டிவிட்டரில், பாகிஸ்தான், ஈராக், கொரியா, வியட்நாம், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே ஒரு ஒற்றுமை உள்ளது அது என்னவென்று உங்களால் யூகிக்க முடிகிறதா? என பதிவு செய்து இருந்தார். ராகுல் காந்தியின் இந்த டிவிட் நேற்று டிவிட்டரில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.

ஒரே ஒரு கேள்வி கேட்ட ராகுல் காந்தி… 8 மணி நேரம் மண்டையை போட்டு குழப்பிய டிவிட்டர்வாசிகள்…
ராகுல் காந்தி

ராகுல் காந்தியை டிவிட்டரில் பின்தொடருபவர்கள் அதற்கான பதில் என்னவாக இருக்கும் பயங்கரமாக சிந்திக்க ஆரம்பித்தனர். ராகுல் காந்தியின் அந்த கேள்விக்கு பதில் என்னவாக இருக்கும் என அவர்கள் பலத்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். இறுதியில் ராகுல் காந்தி நேற்று மாலையில் அதில் பதில் அளித்தார்.

ஒரே ஒரு கேள்வி கேட்ட ராகுல் காந்தி… 8 மணி நேரம் மண்டையை போட்டு குழப்பிய டிவிட்டர்வாசிகள்…
ஈராக்

ராகுல் காந்தி நேற்று மாலை டிவிட்டரில், அந்த நாட்டு தலைவர்கள் தங்களது மக்களை உள்நாட்டில் பிரித்து, தங்கள் நாடுகளை தங்களது காலத்தில் மேலாதிக்க சக்திகளுக்கு இடையில் போர்களங்களாக மாற்றினார்கள். அந்த தலைவர்களின் மக்கள் அதற்கு விலையாக இரத்தம் கண்ணீர் விலையாக செலுத்தினர் என பதிவு செய்து இருந்தார்.