விவசாயிகள் விளைபொருட்களை விற்பனை செய்ய எதில் செல்வார்கள்? சொல்லுங்க மோடிஜி.. ராகுல் காந்தி கேள்வி

விவசாயிகள் விளைபொருட்களை விற்பனை செய்ய எதில் செல்வார்கள்? சொல்லுங்க மோடிஜி.. ராகுல் காந்தி கேள்வி

பீகாரில் 3ம் கட்ட தேர்தல் நடைபெறும் சட்டப்பேரவை தொகுதிகளில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆராரியாவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி பேசுகையில் கூறியதாவது: 2006ல் உங்களுக்கு என்ன நேர்ந்தது. இப்போது நரேந்திர மோடி அதை நாடு முழு நாட்டிற்கும் செய்ய விரும்புகிறார்.

விவசாயிகள் விளைபொருட்களை விற்பனை செய்ய எதில் செல்வார்கள்? சொல்லுங்க மோடிஜி.. ராகுல் காந்தி கேள்வி
ராகுல் காந்தி

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களும் மண்டி, குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் கொள்முதல் அமைப்பை முற்றிலுமாக அழித்து விடும். இதனால்தான் காய்கறிகள் விலை வேகமாக அதிகரிக்கிறது. விவசாயிகளை சுதந்திரமாக்கியதால் அவர்களால் தங்களது உற்பத்தியை எங்கும் விற்பனை செய்ய முடியும் என்று மோடி சொல்கிறார். மோடிஜி சொல்லுங்க.. விவசாயிகள் தங்களது உற்பத்தி விற்பனை செய்ய விமானத்தில் போவார்களா அல்லது சாலையில் செல்வார்களா?

விவசாயிகள் விளைபொருட்களை விற்பனை செய்ய எதில் செல்வார்கள்? சொல்லுங்க மோடிஜி.. ராகுல் காந்தி கேள்வி
பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

சாலையில் செல்வார்கள் என்றால் பீகாரில் சாலைகள் எங்கே உள்ளது?. நம் நாட்டில் 30 சதவீத மக்காசோளம் பீகாரிலிருந்து வருகிறது. விவசாயிகளின் பைகளுக்கு செல்ல வேண்டிய பணம் இடைத்தரகர்களுக்கு செல்கிறது. 2006ம் ஆண்டில் விவசாய உற்பத்தி சந்தைப்படுத்துதல் குழுவை ரத்து செய்ய பீகார் அரசு முடிவு செய்து இருந்தது. 2015ல் நிதிஷ் குமாருக்கு வாக்களித்தீர்கள், நீங்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்கவில்லை. நீங்கள் மெகா கூட்டணிக்கு வாக்களிதீர்கள் ஆனால் நிதிஷ்ஜி மக்கள் ஆணைக்கு துரோகம் செய்தார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.