மத்திய அரசின் கொடுமையை நம் நாட்டு மக்கள் எவ்வளவு காலம் தாங்குவார்கள்? … ராகுல் காந்தி

மத்திய அரசின் கொடுமையை நம் நாட்டு மக்கள் எவ்வளவு காலம் தாங்குவார்கள்? … ராகுல் காந்தி

தொற்று நோய் காலத்தில் மத்திய அரசின் கொடுமையை நம் நாட்டு மக்கள் எவ்வளவு காலம் தாங்குவார்கள் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

நம் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் மிகவும் தீவிரமாக உள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் கொரோனா பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இந்த சூழ்நிலையில், ஆக்சிஜன் தேவை, மருத்துவமனைகளில் படுக்கை வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை இன்னும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அரசின் கொடுமையை நம் நாட்டு மக்கள் எவ்வளவு காலம் தாங்குவார்கள்? … ராகுல் காந்தி
ஆக்சிஜன் சிலிண்டர்கள்

ராகுல் காந்தி டிவிட்டரில், சோக செய்திகள் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கிறது. அடிப்படை பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. தொற்றுநோய் காலத்தில் மத்திய அரசின் கொடுமையை நம் நாட்டு மக்கள் எவ்வளவு காலம் தாங்குவார்கள்? இதற்கு பொறுப்புக்கூறல் உள்ளவர்கள் எங்காவது ஒளிந்து கொள்கிறார்கள் என பதிவு செய்து இருந்தார்.

மத்திய அரசின் கொடுமையை நம் நாட்டு மக்கள் எவ்வளவு காலம் தாங்குவார்கள்? … ராகுல் காந்தி
சோனியா காந்தி, உத்தவ் தாக்கரே, சரத் பவார்

வேலையில்லாதோருக்கு ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்பட 9 பரிந்துரைகளை நிறைவேற்றக் கோரி பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி, சரத் பவார், மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி மற்றும் உத்தவ் தாக்கரே உள்பட நாட்டின் முக்கிய 12 எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாக கடிதம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.