கோவிட்-19, சீனா ஆக்கிரமிப்பு, ஜி.டி.பி. குறித்து பொய் பொய்யா பா.ஜ.க. அரசு சொல்கிறது… ராகுல் காந்தி குற்றச்சாட்டு…

கோவிட்-19, சீனா ஆக்கிரமிப்பு, ஜி.டி.பி. குறித்து பொய் பொய்யா பா.ஜ.க. அரசு சொல்கிறது… ராகுல் காந்தி குற்றச்சாட்டு…

காங்கிரசின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த சில வாரங்களாக, கோவிட்-19, இந்தியா-சீனா மோதல், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், நாட்டின் பொருளாதாரம் உள்பட பல விவகாரங்களில் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமையன்று டிவிட்டரில், 2014 முதல் பிரதமரின் தொடர்ச்சியான தவறுகளும், கண்மூடித்தனங்களும் அடிப்படையில் இந்தியாவை பலவீனப்படுத்தியுள்ளன. மேலும் நம்மை பாதிக்கக்கூடியவையாக ஆக்கியுள்ளன. புவிசார் அரசியல் உலகில் வெற்று வார்த்தைகள் போதுமானதாக இல்லை என பதிவு செய்து இருந்தார். மேலும், இந்தியா-சீனா பிரச்சினை குறித்து அவர் பேசிய வீடியோவையும் ராகுல் காந்தி பதிவேற்றம் செய்து இருந்தார்.

கோவிட்-19, சீனா ஆக்கிரமிப்பு, ஜி.டி.பி. குறித்து பொய் பொய்யா பா.ஜ.க. அரசு சொல்கிறது… ராகுல் காந்தி குற்றச்சாட்டு…

தற்போது கோவிட்-19, சீனா ஆக்கிரமிப்பு உள்ளிட்ட விஷயங்களில் மத்திய அரசு பொய் சொல்கிறது என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில், பா.ஜ.க. பொய்களை நிறுவனமயமாக்கியுள்ளது. 1. பரிசோதனைகள் கட்டுப்படுத்துதல் மற்றும் தவறான இறப்பு அறிக்கைகள் அளிப்பதன் மூலம் கோவிட்-19 குறித்து பொய் சொல்கிறது. 2. புதிய கணக்கீடு மூறை வாயிலாக மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்து பொய் சொல்கிறது. 3. ஊடகங்களை மிரட்டுவதன் மூலம் சீன ஆக்கிரமிப்பு குறித்து பொய் சொல்கிறது.

கோவிட்-19, சீனா ஆக்கிரமிப்பு, ஜி.டி.பி. குறித்து பொய் பொய்யா பா.ஜ.க. அரசு சொல்கிறது… ராகுல் காந்தி குற்றச்சாட்டு…

இந்த மாயை விரைவில் உடையும், அதனால் இந்தியா பாதிக்கும். என பதிவு செய்து இருந்தார். மேலும், அந்த டிவிட்டில் சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றின் கட்டுரையையும் அவர் அதில் பதிவேற்றம் செய்து இருந்தார். ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை கூறி வருவது மத்திய அரசுக்கு பெரும் தலைவலியாக உருவாகி உள்ளது.