மோடி அரசு தனது நண்பர்களின் பையை நிரப்புவதால் இந்தியாவில் ஏழைகள் பசியுடன் உள்ளனர்.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மோடி அரசு தனது நண்பர்களின் பையை நிரப்புவதால் இந்தியாவில் ஏழைகள் பசியுடன் உள்ளனர்.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் ஏழைகள் பசியுடன் உள்ளனர் ஏனென்றால் மோடி அரசு தனது சிறப்பு நண்பர்களின் பைகளை நிரப்புகிறது என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

சர்வதேச அளவில் பசியால் வாடுபவர்களின் அடிப்படையில் சர்வதேச பசி இன்டெக்ஸ் என்ற உலக நாடுகளின் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. 2020ம் ஆண்டுக்கான சர்வதேச பசி இன்டெக்ஸ் நேற்று வெளியானது. இந்த பட்டியலில் மொத்தமுள்ள 107 நாடுகளில் இந்தியா 94வது இடத்தில் உள்ளது. சர்வதேச பசி இன்டெக்ஸை குறிப்பிட்டு மத்திய அரசை ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

மோடி அரசு தனது நண்பர்களின் பையை நிரப்புவதால் இந்தியாவில் ஏழைகள் பசியுடன் உள்ளனர்.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு
ராகுல் காந்தி

ராகுல் காந்தி டிவிட்டரில் இது தொடர்பாக டிவிட்டரில், இந்தியாவில் ஏழைகள் பசியுடன் உள்ளனர். ஏனென்றால் மத்திய அரசு தனது சிறப்பு நண்பர்களின் பாக்கெட்டுகளை நிரப்புவதில் மும்முரமாக உள்ளது என பதிவு செய்து இருந்தார். மேலும், 2020 சர்வதேச பசி இன்டெக்ஸில் பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவை காட்டிலும் முன்னணியில் உள்ளதையும் பதிவு செய்து இருந்தார்.

மோடி அரசு தனது நண்பர்களின் பையை நிரப்புவதால் இந்தியாவில் ஏழைகள் பசியுடன் உள்ளனர்.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பிரதமர் மோடி

2020 சர்வதேச பசி இன்டெக்ஸில் நமது அண்டை நாடுகளான நேபாளம் (73), வங்க தேசம் (75) மற்றும் பாகிஸ்தான் (88) ஆகியவை இந்தியாவை காட்டிலும் முன்னணியில் உள்ளன. அந்த தரவரிசை பட்டியலின்படி, ரவண்டா (97), ஆப்கானிஸ்தான் (98), லிபியா (102), மொசம்பிக் (103) மற்றும் சாட் (107) ஆகிய 13 நாடுகள் மட்டுமே இந்தியாவை காட்டிலும் மோசமான நிலையில் உள்ளன.