முன்னாள் வீரர்களுக்கு ராகுல் டிராவிட் முன்வைக்கும் கோரிக்கை

 

முன்னாள் வீரர்களுக்கு ராகுல் டிராவிட் முன்வைக்கும் கோரிக்கை

கொரோனாவால் உலகமே புதிய இயல்புக்கு மாறிக்கொண்டிருக்கிறது. அதாவது தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது, மாஸ்க் அணிவது, கைகளைக் குலுக்காமல் வணக்கம் சொல்வது என மாறிக்கொண்டிருக்கிறது.

ஏற்கெனவே திட்டமிட்டிருந்த விளையாட்டுப் போட்டிகள் பல ஒத்தி வைக்கப்பட்டன. பல ரத்து செய்யப்பட்டன. சில முடிவு எடுக்கப்படாமல் இருக்கின்றன.

முன்னாள் வீரர்களுக்கு ராகுல் டிராவிட் முன்வைக்கும் கோரிக்கை
Rahul Dravid PC: Facebook

உலகக்கோப்பை போட்டிகள்கூட அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத நாடுகளில் மட்டும் போட்டிகள் நடக்கின்றன.

இந்நிலையில் பல்வேறு விஷயங்களைப் பற்றி விவாதிக்க நேஷனல் கிரிக்கெட் அகாடமி இன்று கூடியது. அதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் கலந்துகொண்டார்.

அப்போது அவர், கொரோனா நோய்த் தொற்று காரணமாக ரஞ்சி போட்டி விளையாடும் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட வில்லை. எனவே, அவர்களை பழைய நிலைக்கு கொண்டு வர முன்னாள் வீரர்கள் பயிற்சியாளராக மாற வேண்டும் எனும் கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவதில் தம் நேரம் முழுக்கச் செலவிடுபவர் ராகுல் டிராவிட்.

முன்னாள் வீரர்களுக்கு ராகுல் டிராவிட் முன்வைக்கும் கோரிக்கை
Rahul Dravid PC: Facebook

அவர் போட்டிகளில் ஆடியபோது ’இந்திய அணியின் சுவர்’ என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டார். அந்தளவு டெஸ்ட் போட்டிகளில் அவரின் விக்கெட்டை வீழ்த்துவது அவ்வளவு சுலபமல்ல.

டெஸ்ட் போட்டியில் நிதானமான ரன் சேர்ப்பு, ஒருநாள் போட்டியில் அதிரடி ரன் குவிப்பு என விளையாடியவர் ராகுல் டிராவிட். அதேபோல தொடக்க வீரர், ஒன் டவுன், மிட் ஆர்டர் என எங்கு இறக்கினால் அந்தச் சூழலுக்கு ஏற்ப ஆடுபவர். மிகச் சிறந்த விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டவர்.