இலங்கை செல்லும் இளம் வீரர்களை பட்டாளத்தை வழிநடத்துகிறார் ராகுல் டிராவிட் – பிசிசிஐ அறிவிப்பு!

இலங்கை செல்லும் இளம் வீரர்களை பட்டாளத்தை வழிநடத்துகிறார் ராகுல் டிராவிட் – பிசிசிஐ அறிவிப்பு!

முழுவதுமே மூத்த வீரர்களை மட்டுமே கொண்ட ஒரு இந்திய அணி ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அதேபோல ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்களைக் கொண்ட மற்றொரு இந்திய அணி அடுத்த மாதம் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செல்கிறது. இலங்கைக்கு எதிராக மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட இரு தொடர்களில் பங்கேற்கிறது.

இலங்கை செல்லும் இளம் வீரர்களை பட்டாளத்தை வழிநடத்துகிறார் ராகுல் டிராவிட் – பிசிசிஐ அறிவிப்பு!

ஜூலை 13, 16,18 ஆகிய தேதிகளில் ஒருநாள் போட்டிகளும் 21, 23, 25 ஆகிய தேதிகளில் டி20 போட்டிகளும் நடைபெறவுள்ளன. அனைத்துப் போட்டிகளும் கொழும்புவில் உள்ள பிரேமதசா மைதானத்தில் நடைபெறுகின்றன. இதில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி இந்த அணியை மூத்த வீரர் ஷிகர் தவான் தலைமை தாங்குகிறார். துணை கேப்டனாக புவனேஸ்வர் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை செல்லும் இளம் வீரர்களை பட்டாளத்தை வழிநடத்துகிறார் ராகுல் டிராவிட் – பிசிசிஐ அறிவிப்பு!

பிரித்வி ஷா, தேவ்தத் படிக்கல், ருத்ராஜ் கெயிக்வாட், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, நிதிஷ் ராணா, இஷான் கிஷான், தீபக் சஹார் உள்ளிட்ட பெரும் இளம் பட்டாளமே இலங்கைக்குச் செல்கிறது. மூத்த வீரர்களுக்கான தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி உள்ளார். இந்தப் புதிய இளம் அணிக்கு முன்னாள் ஜாம்பாவான் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக பிசிசிஐ நியமித்துள்ளது. இதற்கு முன்னதாக 2014ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணியின் பேட்டிங் ஆலோசகராக டிராவிட் பணியாற்றிருக்கிறார்.