கோவிட் வெளிநாட்டு உதவி குறித்த தகவல்களில் ஏன் வெளிப்படைத்தன்மை இல்லை? ராகுல் காந்தி கேள்வி

கோவிட் வெளிநாட்டு உதவி குறித்த தகவல்களில் ஏன் வெளிப்படைத்தன்மை இல்லை? ராகுல் காந்தி கேள்வி

கோவிட் வெளிநாட்டு உதவி குறித்த தகவல்களில் ஏன் வெளிப்படைத்தன்மை இல்லை என மோடி அரசிடம் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

நம் நாடு கொரோனா வைரஸின் இரண்டாவது அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கொரோனா நோயாளிகள் பலர் உயிர் இழந்து வருகின்றனர். இந்தியாவின் நெருக்கடியை உணர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து என உலகின் பல நாடுகள் ஆக்சிஜன், ஆக்சிஜன் உற்பத்தி கருவிகளை அனுப்பி உதவி வருகின்றன. இந்த சூழ்நிலையில் கோவிட் வெளிநாட்டு உதவி குறித்த தகவல்களில் ஏன் வெளிப்படதன்மை இல்லை என பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

கோவிட் வெளிநாட்டு உதவி குறித்த தகவல்களில் ஏன் வெளிப்படைத்தன்மை இல்லை? ராகுல் காந்தி கேள்வி
வெளிநாடுகளின் கோவிட் உதவி மருந்து பொருட்கள்

இது தொடர்பாக ராகுல் காந்தி டிவிட்டரில், கோவிட் வெளிநாட்டு உதவி குறித்த கேள்விகள்: இந்தியாவுக்கு அனைத்து பொருட்கள் பெற்றுள்ளதா? அவை எங்கே? அவற்றின் மூலம் யார் பலன் பெறுகிறார்கள்? மாநிலங்களுக்கு எப்படி அவை ஒதுக்கீடு செய்யப்படுகிறது? ஏன் வெளிப்படத்தன்மை இல்லை? ஏதேனும் பதில்கள், மத்திய அரசு? என பதிவு செய்துள்ளார்.

கோவிட் வெளிநாட்டு உதவி குறித்த தகவல்களில் ஏன் வெளிப்படைத்தன்மை இல்லை? ராகுல் காந்தி கேள்வி
பிரதமர் மோடி

முன்னதாக ராகுல் காந்தி மற்றொரு டிவிட்டரில், நாட்டில் வேலையின்மை விகிதம் தொடர்பான இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையத்தின் (சி.எம்.ஐ.இ.) தரவு குறித்த செய்தியை பதிவேற்றம் செய்து, தடுப்பூசிகளோ, வேலைவாய்ப்புகளோ இல்லை. கொரோனா வைரஸ் தொற்றுநோயை பொதுமக்கள் எதிர்கொள்கின்றனர். மோடி அரசு முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது என பதிவு செய்து இருந்தார்.