Home ஆன்மிகம் ராகு கேது பெயர்ச்சி 2020-22 ராஜயோகம் பெறும் 6 அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்?

ராகு கேது பெயர்ச்சி 2020-22 ராஜயோகம் பெறும் 6 அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்?

ஒவ்வொருவர் வாழ்விலும் கிரக சூழ்நிலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் ராகு கேது ஆகிய இரண்டு பெரிய நிழல் கிரகங்கள் வாக்கிய பஞ்சாங்கப்படி வரும் 01-09-2020 நன்றும் அன்றும் திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் 23-09-2020 அன்றும் இடம்பெறுகின்றன.

ராகு பகவான் மிதுனத்தில் இருந்து ரிஷப ராசிக்கும் கேது பகவான் தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார். வருகிற 2022 ஏப்ரல் 12ஆம் தேதி வரை அதாவது 18 மாதங்கள் இவர்கள் மேற்படி வாசம் செய்வார்கள்.

ராகு, கேது பெயர்ச்சியால் பணமழையில் ...

12 ராசிகளுக்கும் உரிய துல்லியமான பலன்கள் இங்கு காணலாம். இதில் ராஜயோகம் பெறப்போகும் 6 அதிர்ஷ்ட ராசிக்காரர்களும் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் இதுவரை பட்ட துன்பங்களையும் இனிமேல் பெறப்போகும் இன்பங்களையும் இங்கு பார்க்கலாம்.

மேஷம்

mesham ttn card

2-ம் வீட்டில் ராகுவும் 8-ம் வீட்டில் கேதுவும் வரப்போகிறார்கள். இதுவரை பட்ட துன்பம் எல்லாம் மறையப் போகிறது. பணவரவு எடுத்த காரியத்தில் வெற்றி, திருமண நிகழ்வு, குடும்ப மகிழ்ச்சி என எல்லாமே நல்ல படியாகத்தான் நடக்கப் போகின்றன. ஆனால் நீங்கள்தான் தேவையற்ற மன குழப்பம், கவலை, உணர்ச்சிவசப்படுதல், மனக்கசப்பு, விட்டுக்கொடுத்து போகாமல் இருத்தல் என மனக் குழப்பத்தை ஏற்படுத்துவீர்கள்.
ஆகவே டோன்ட் வொரி… பீ ஹேப்பி!!
சகோதரர்கள் உறவினர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படலாம். கவனம் தேவை. உங்களுடைய யோக மதிப்பெண் 50. அதிர்ஷ்டசாலி ராசியில் நீங்கள் 9-ம் இடத்தில் இருக்கிறீர்கள்.

ரிஷபம்

rishabam ttn card

உங்கள் ராசியில் ராகுவும் கேதுவும் 7-ம் வீட்டிலும் குடியிருக்க போகிறார்கள். நீங்கள் வருகிற ஒன்றரை ஆண்டுகள் நிறைய போராட வேண்டியது இருக்கும். தடைகளும் தோல்விகளும் வரலாம். மனக் கவலைகள் ஏற்படும். எல்லாம் இருந்தும் மிகுந்த போராட்டங்களுக்கும் பிறகு எண்ணியதை அடைவீர்கள். எதையும் தீர ஆலோசித்து பொறுமையுடன் செயல்பட்டால் மட்டுமே வெற்றி கிடைக்கும். ஆன்மீக வழிபாடு துணைநிற்கும் உங்களுடைய மதிப்பெண் 40.
அதிஷ்ட ராசியில் நீங்கள்தான் பன்னிரண்டாம் இடத்தில் இருக்கிறீர்கள். ஆகவே கவனம் கவனம் கவனம்.

மிதுனம்

midhunam ttn card

ராஜயோக அதிர்ஷ்ட ராசியில் நீங்கள் 3-ம் இடத்தில் இருக்கிறீர்கள். உங்களுடைய மதிப்பெண் 80. இந்த முறை ராகு 12ஆம் வீட்டுக்கும் கேது 6-ம் வீட்டுக்கு வருகிறார்கள். புகழின் உச்சிக்கு செல்ல போகிறீர்கள். பண மழை கொட்டும். எடுத்த காரியம் எல்லாம் ஜெயமாகும். குடும்ப பிரச்சினைகள் தீரும். வியாபாரம் தொழிலில் அமோக வெற்றி பெறும். இதுவரை பட்ட கஷ்டம் நீங்கி இன்பத்தில் திளைப்பீர்கள். செலவு செய்வதில் மட்டும் கவனம் தேவை நிறைய நிம்மதி காண்பீர்கள்.

கடகம்

kadakam ttn card

ராஜயோக அதிர்ஷ்டசாலி ராசியில் 5-ம் இடம் உங்களுக்கு. உங்களுடைய மதிப்பெண் 70. உங்கள் ராசியில் ராகு 11-ம் வீட்டிலும், கேது 5-ம் வீட்டிலும் வருகிறார்கள். பல நன்மைகள் நடக்கும். கஷ்டம் நீங்கும் அதிக சம்பாத்தியம் கைகூடும். புது தொழில் வியாபாரம் புது முயற்சிகள் கைகொடுக்கும். எடுத்த முயற்சிகள் ஜெயமாகும். இருந்த போதிலும் கல்வி காதல் குடும்ப விஷயங்களில் சிறுசிறு தடைகள் வரலாம். கவனம் தேவை திட்டமிட்டு செயல்பட்டால் எல்லாம் வெற்றியே!

சிம்மம்

simmam ttn card


ராகு 10-ம் வீட்டிலும் கேது 4-ம் வீட்டிலும் வருகிறார்கள். நீங்கள் தொழிலில் அபரிமிதமான வெற்றிகள் காணப் போகிறீர்கள். உழைப்போம் வருமானமும் பல மடங்கு பெருகும். ஏற்கனவே எடுத்த முயற்சிகள். இப்போது தொழில் ரீதியான பலன்கள் தரும் குடும்பத்தில் விரிசல் ஏற்படலாம். ஜாக்கிரதை வாஸ்து சாஸ்திரப்படி வீட்டை மாற்றிக் கொள்ளுங்கள். காரணம் வீடும் வாகனமும் உங்களுக்கு தடைகளை ஏற்படுத்தலாம். சில விஷயங்கள் கடைசி நிமிடத்தில் உங்களை போராட வைக்கும் திட்டமிட்டு செயல்படுங்கள். உங்களுடைய மதிப்பெண் 50. அதிஷ்ட ராசியில் நீங்கள் 10-ம் இடத்தில் இருக்கிறீர்கள்..

கன்னி

kanni ttn card

ராஜயோக அதிஸ்ட ராசி வரிசையில் நீங்கள் நடு மத்தியம் ஆக 6-ம் இடத்தில் இருக்கிறீர்கள். உங்களுடைய மதிப்பெண் 65. ராகு உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டிலும் கேது 3-ஆம் வீட்டிலும் வருகிறார்கள். கல்வி வேலையில் நீங்கள் களை கட்டப் போகிறீர்கள். வெளிநாடு வெளிமாநிலம் வெளியூர் என இடம் பெறுவீர்கள். இவை உங்களுக்கு யோக பலன் தரும் லாபம் கிடைக்கும். எடுத்த முயற்சிகள் தள்ளிப் போகலாம். ஆனால் வெற்றி கிடைக்கும். மனதில் பயம் இருக்கும். அதனை மாற்றுங்கள் திட்டமிட்டு தைரியமாக செயல்பட்டால் எல்லாம் ஜெயமே.

துலாம்

thulam ttn card

ராகு 8-ம் வீட்டிற்கும் கேது 2-ம் வீட்டிற்கு வருகிறார்கள். நீங்கள் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் பெரிய அளவில் பணம் அல்லது சொத்துக்கள் உங்களை தேடி வரலாம் என்பதை தவிர பொருளாதாரத்தில் சிரமப்படுவீர்கள். பணப்பற்றாக்குறையால் சிக்கித்தவிக்கும் காலமிது. குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் வரலாம். வாகனங்களை வேகமாக இயக்காதீர்கள். கஸ்டமர் கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய மதிப்பெண் 45. அதிர்ஷ்ட ராசியில் உங்களுக்கு 11வது இடம் தான் அமைகிறது.

விருச்சிகம்

viruchigam ttn card


ராகு 7ம் இடத்திற்கும் கேது உங்கள் ராசிக்கும் வருகிறார்கள். ஏழரை சனி முடிந்ததால் நிம்மதி அடைந்திருக்கிறார்கள். சில வெற்றிகளையும் தடைகளையும் சந்திப்பீர்கள் ராகு வெற்றி தருவார் கேது தடை ஏற்படுத்துவார். இதுதான் அடிப்படை விஷயம் புதிதாக ஆன்மிக சிந்தனைகள் துளிர்விடும். இதன் மூலம் நீங்கள் வெற்றியடைய முடியும். அகலக் கால் வைக்காதீர்கள். பொருளாதார உயர்வும் செய்யாது சார்பாகவும் போகாது வீட்டில் திருமணங்கள் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். உறவுகள் மேம்படும் திருமண விஷயத்தில் ஆராய்ந்து செயல்படவும் அவசர முடிவு எடுக்காதீர்கள். ஓரளவுக்கு நிம்மதி பெறுவீர்கள். உங்களுடைய மதிப்பெண் 60. அதிர்ஷ்ட ராசிகள் ஏழாமிடத்தில் இருக்கிறீர்கள்.

தனுசு

dhanusu ttn card

ராஜயோக அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் ராசிக்காரர்களின் நீங்கள்தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறீர்கள். உங்களுடைய மதிப்பெண் 90. ராகு 6-ம் இடத்திலும் கேது 12-ம் இடத்திலும் வருகிறார்கள் இதுவரை உங்களை போல் கஷ்டப்படும். நடப்பவர்களும் வேறுயாருமில்லை. அத்தனை இன்னல்களும் பொடிப்பொடியாக போகின்றன சுருக்கமாகச் சொன்னால் மிகப்பெரிய கண்டத்தை தாண்டி விட்டீர்கள். இனி தொட்டதெல்லாம் துலங்கும் முயற்சிகள் வெற்றி தரும். யோகங்கள் வீடு தேடி வரும் இனி தடை கிடையாது. எல்லாமே ஜெயம் தான் பணமழையும் குடும்ப மகிழ்ச்சியும் உங்களை ஆனந்த வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் உடல் நிலையில் மட்டும் சிறிது கவனம் தேவை.

மகரம்

magaram ttn card

ராகு 5-ம் வீட்டிலும் கேது 11 ஆம் வீட்டிலும் வருகிறார்கள். உங்களுக்கு பிடித்த விஷயம் எல்லாவற்றையும் நடத்தி காட்டுவீர்கள் குழந்தை பாக்கியம் காதல் யோகம் இன்ப வாழ்க்கை என எல்லாமே கைகூடி வரப்போகிறது. சொத்து வாகன யோகமுண்டு. மிகப்பெரிய செயல்கள் நடந்து நீங்கள் அளப்பரிய வெற்றி காண்பீர்கள். ஆனாலும் உங்கள் மனதில் ஒருவித விரக்தி இருக்கும் இது தேவையில்லாதது ஆலயம் செல்லுங்கள் மன பயம் குழப்பம் அகலும் உங்களுடைய மதிப்பெண் 55. அதிர்ஷ்டசாலி ராசியில் உங்களுக்கு எட்டாமிடம்.

கும்பம்

kumbam ttn card


ராஜயோக அதிர்ஷ்ட ராசியில் நீங்கள் 4-ம் இடத்தில் இருக்கிறீர்கள் உங்களுடைய மதிப்பெண் 75. ராகு 4-ம் வீட்டிலும் கேது 10-ஆம் வீட்டிலும் வருகிறார்கள். வெளிநாடு யோகம் இருக்கிறது. புதிய வாகனம் வாங்குவீர்கள் வீடு கட்டுவீர்கள் சொத்துக்கள் சேரும் ஆடைகள் ஆடம்பர செலவுகள் இருக்கும். பொருளாதாரத்தில் உயர்ந்து நிற்பார்கள். வேலையிலும் தொழிலும் சிறு சிறு குழப்பம் தடை தவிர எல்லாமே சிறப்பாகவே இருக்கும்..

மீனம்

meenam ttn card

ராஜயோக அதிர்ஷ்ட ராசியில் நீங்கள் 2-ம் இடத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் உங்களுடைய யோக மதிப்பெண் 85. ராகு 3-ம் வீட்டிற்கு 9-ம் வீட்டிற்கும் வருகிறார்கள். பொருளாதாரத்தை சந்தித்து ஆன்மீக சுற்றுலா இன்ப பயணங்கள் மேற்கொள்வீர்கள். பூர்வஜென்ம புண்ணியங்கள் வந்து சேரப் போகின்றன முயற்சிகளெல்லாம் வெற்றிதரும் திறமைகள் வெளிப்பட்டு புகழ் கிட்டும் தைரியம் பெருகும். மிக சந்தோஷமான வாழ்க்கை அமைய போகிறது. வாழ்க்கையில் திருப்புமுனைகள் ஏற்பட்டு நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைவீர்கள்.

முக்கிய குறிப்பு

ராஜயோக அதிர்ஷ்டங்களை சந்திக்கப்போகும். தனுசு, மீனம், மிதுனம், கும்பம் கடகம், கன்னி ஆகிய 6 ராசிக்காரர்களை மற்ற 6 ராசியினர் பக்கத்தில் வைத்துக் கொண்டு செயல்பட்டால் உங்களுக்கும் நல்ல யோக பலன்கள் கிட்டும். ராஜயோக பலன்கள் பெருமளவு நீங்களும் அனுபவிக்கலாம். இதுதான் ஒரே பரிகாரம்

மாவட்ட செய்திகள்

Most Popular

வீட்டை விட்டு ஓடிய காதலர்கள் : காதலன் வீட்டுக்கு தீ வைத்த பெண் வீட்டார்!

காதல் திருமணம் செய்ய காதலர்கள் வீட்டை விட்டு ஓடிய நிலையில் காதலன் வீடு சூறையாடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி...

’17 வயது சிறுமி கர்ப்பம்’: திருமண ஆசைக் காட்டி வன்கொடுமை செய்த இளைஞர் கைது!

மொரப்பூர் அருகே 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய மெக்கானிக் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தருமபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியில் வசித்து வரும் இளைஞர்...

11,891 பேர் நேற்று மட்டுமே மரணம்– உலகளவில் கொரோனா

டிசம்பர் 2-ம் தேதி நிலவரப்படி நிலவரப்படி, உலகளவில் கொரோனாவின் பாதிப்பு எவ்வளவு, குணம் அடைந்தவர்கள், மரணம் அடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களைப் பார்ப்போம். உலகம் முழுவதும் கொரோனாவால்...

ராமேஸ்வரத்தில் பேரிடர் மீட்புக்குழுவினர் ஆய்வு

ராமநாதபுரம் ராமேஸ்வரத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, தேசிய பேரிடர் மீட்பு குழு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். வங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவி புயல், நாளை மறுதினம்...
Do NOT follow this link or you will be banned from the site!